"விநாயகர் சதுர்த்தி விழா தடை ஒருதலைபட்சமானது" அண்ணாமலை ஆவேசம்!
எல்லா மதங்களிலும் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடக்கும் பண்டிகைகளுக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் எனவும் கூறினார்.
By : TamilVani B
டெல்லி சென்றுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அங்கு செய்தியாளர்களை சந்திந்தார்.
அங்கு அவர் பேசுகையில், "தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் விநாயகர் சதுர்த்தி தடை விதிக்கப்பட்டுள்ளது சரியான முடிவு அல்ல. பா.ஜ.க எப்போழுதும் தமிழக அரசின் முடிவுகளுக்கு தார்மீக ஆதரவு அளிக்கும் சென்ற முறை விநாயகர் சதுர்த்தி தடைக்கு பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பினர் ஒத்துழைப்பு அளித்தோம். ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளாதக தமிழக அரசே கூறும் நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகிறது. கட்டுபாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்" எனவும் அவர் கேட்டு கொண்டார்.
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடை என்று கூறினால் அந்த தடை மதுபானகடைகளை மட்டும் திறப்பது எந்த வகையில் சரியான முடிவு என அவர் கேள்வி எழுப்பினார்.
எதிர்கட்சிகள் விநாயகர் சதுர்த்தியை வைத்து பா.ஜ.க அரசியல் செய்வதாக கூறுவது முற்றிலும் தவறான கருத்து. எல்லா மதங்களிலும் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடக்கும் பண்டிகைகளுக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் எனவும் கூறினார்.