Kathir News
Begin typing your search above and press return to search.

கடவுள் உண்டு என்பதை ஸ்டாலின் ஒப்புகொள்வாரா- அண்ணாமலை கேள்வி ?

Annamalai Questions MK Stalin !

கடவுள் உண்டு என்பதை ஸ்டாலின் ஒப்புகொள்வாரா- அண்ணாமலை கேள்வி ?
X

TamilVani BBy : TamilVani B

  |  5 Sept 2021 9:30 PM IST

கடவுள் இல்லை என கூறும் திமுககாரர்கள் அனுதினமும் கடவுளை பற்றியே ஏன் பேசுகின்றனர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி.

சிவகாசியில் நடந்த மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பாஜக தலைவர் கலந்துகொண்டார். இதில் பேசிய அவர் அடுத்த ஐந்தாண்டுகளில் பாஜக 150 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். அதனை தொடர்ந்து திமுகவினர் கடவுள் இல்லை என கூறிவருகின்றனர் ஆனால் சட்டமன்றத்தில் கடவுளை பற்றி விவாதித்து வருகின்றனர் அதுமட்டுமின்றி ஆண்டாள் கோவில் கோபுரமுத்திரையை தான் முதல்வரும் பயன்படுத்துகிறார். மேலும், கடவுள் இருக்கிறார் என ஒத்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த ஐந்தாண்டுகால ஆட்சியே திமுக கடைசியாக செய்யும் ஆட்சி திமுகவை முழுவதுமாக ஒழித்துவிட்டு பாஜகவை ஆட்சியில் அமரவைக்கும் வரை ஓய்வில்லாமல் உழைக்க போவதாகவும் தெரிவித்தார். தொண்டர்களிடம் அண்ணாமலை பேசியது அவர்களுக்கு புத்துணர்வு அளிப்பதாக இருந்தது.

Source: News 18 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News