Kathir News
Begin typing your search above and press return to search.

சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம் - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் வெகுண்டு எடுத்த முடிவு!

சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம் - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் வெகுண்டு எடுத்த முடிவு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 July 2020 12:10 PM GMT

நீலம் மற்றும் ஜீலம் நதிகளில் அணைகள் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்படுவதை எதிர்த்து சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

திங்களன்று, நீலம் ஜீலம் மற்றும் கோஹலா நீர் மின் திட்டங்களை சட்டவிரோதமாக நிர்மாணிப்பதைக் கண்டித்து பொதுமக்கள் பெரிய எதிர்ப்பு பேரணி நடத்தினர். பாகிஸ்தான் மற்றும் சீனா கட்டிய அணைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்ப்பாளர்கள் எடுத்துரைத்தனர்.

உலக அளவில் இந்த சிக்கலை முன்னிலைப்படுத்த #SaveRiversSaveAJK என்ற ஹேஸ்டேக் உடன் ட்விட்டர் சமூக ஊடக பிரச்சாரமும் தொடங்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் இடையே சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில், நதி ஒப்பந்தம் எந்த சட்டத்தின் கீழ் கையெழுத்திடப்பட்டது என்று எதிர்ப்பாளர்கள் கேட்டனர். பாக்கிஸ்தானும் சீனாவும் ஆறுகளை ஆக்கிரமித்து ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் தீர்மானங்களை மீறுகின்றன என்று அவர்கள் கூறினர்.

"நாங்கள் கோஹலா திட்டத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லப்போகிறோம். அது நிறுத்தப்படாத வரை அங்கே தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்" என்று எதிர்ப்பாளர்களில் ஒருவர் கூறினார்.

அண்மையில், 2.4 பில்லியன் டாலர் செலவில் கோஹலாவில் 1,124 மெகாவாட் நீர்மின் திட்டத்தை நிர்மாணிப்பதற்காக ஒரு சீன நிறுவனத்துக்கும் பாகிஸ்தான் மற்றும் சீனா அரசாங்கங்களுக்கும் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News