Kathir News
Begin typing your search above and press return to search.

தேச விரோத தி.மு.க! அனைத்து டி.விகளிலும் பிரதமர் மோடியின் உரை! கலைஞர் டி.வியிலோ இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் பிரதமரின் உரை!!

தேச விரோத தி.மு.க! அனைத்து டி.விகளிலும் பிரதமர் மோடியின் உரை! கலைஞர் டி.வியிலோ இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் பிரதமரின் உரை!!

தேச விரோத தி.மு.க! அனைத்து டி.விகளிலும் பிரதமர் மோடியின் உரை! கலைஞர் டி.வியிலோ இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் பிரதமரின் உரை!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Aug 2019 3:02 PM IST

நாடு முழுவதும் நேன்று 73-வது சுதந்திரதின விழா, வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள ஷெர் ஐ காஷ்மீர் மைதானத்தில் நடந்த விழாவில் கவர்னர் சத்யபால் மாலிக் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேசியக்கொடி ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.
சென்னை தியாகராயநகரில் தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
இதேபோல காங்கிரஸ், த.மா.கா. பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்பட பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கட்சி அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.
ஆனால் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றாமல் புறக்கணித்தார். இந்த முறை மட்டுமல்ல ஒவ்வொரு முறையும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றுவதை புறக்கணித்தே வந்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் தி.மு.வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் டிவியும் நேற்று தேசவிரோத விஷத்தை கக்கியது.
நேற்று காலை அனைத்து தொலைக்காட்சிகளிலும் நமது பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையை நேரடியாக ஒளிபரப்பியது. வேறு எந்த இந்திய சேனலுமே செய்யாத வேலையை கலைஞர் டிவி செய்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டு சுதந்திரதின உரை நிகழ்த்தியதை ஒளிபரப்பி பாகிஸ்தான் மீதான பக்தியை வெளிப்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு எதிராக ஆற்றிய உரையை ஒளிப்பரப்பி நமது 73-வது சுதந்திர தினத்தை கொண்டாடிய ஒரே டிவி, கலைஞர் டிவியாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு தேச விரோத கருத்து திணிப்பில் உச்சம் அடைந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தி.மு.கவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் சரவணன், ரிப்பப்ளிக் தொலைக்காட்சி நேரலையில் தோன்றி, “காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்த பகுதி அல்ல” என்கிறார். நிகழ்சியை நடத்திய அர்னாப் கோஸ்வாமி, குறுக்கிட்டு “இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது” என்று எடுத்துக்கூறிய பிறகும் அந்த கருத்தை திரும்பப் பெறவில்லை.
இந்த கருத்தை ஆமோதிக்கும் வகையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் இதுவரை சரவணனை கண்டிக்க வில்லை.
ஆக... தி்.மு.க தேச விரோதி என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.
தேச பக்தி உள்ள தமிழர்கள்தான் இனி முடிவு செய்ய வேண்டும்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News