விநாயகர் சிலைகளை குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற காவலர்கள்- ஆந்திராவில் அதிர்ச்சி !
குப்பை வண்டியில் வைத்து எடுத்து சென்றதாக சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
By : Shiva
ஆந்திர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு ஜகன் மோகன் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குண்டூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவற்றை குப்பை வண்டியில் வைத்து எடுத்து சென்றதாக சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவின் பல பகுதிகளில் கோவில்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜெகன்மோகன் அரசு இந்துக்களுக்கு எதிரான, பாகுபாடு காட்டும் அரசு என்ற குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோவால் ஆந்திர அரசு தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
"குப்பை வண்டியில் விநாயகர் சிலைகளை வைத்து விபத்து அல்ல. இது இந்து மதத்தை இழிவுபடுத்தும் ஜெகன்மோகன் அரசின் முயற்சியாகவே தெரிகிறது. குப்பை வண்டியில் வைத்து சிலைகளை அகற்றியது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்களின் குப்பையான மன நிலையையே காட்டுகிறது" என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் சத்திய குமார் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை கட்டுப்படுத்த அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆந்திராவில் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. விநாயகர் பந்தல்களை அமைப்பதற்கு தடை விதித்ததோடு வெளி இடங்களில் பண்டிகையைக் கொண்டாடவும் தடை விதித்துள்ளது.
ஒரு நாளைக்கு 1300 புதிய கொரோனா தொற்றுகள் என்ற குறைந்த விகிதத்திலேயே நோய்ப் பரவல் இருந்த போதும் மூன்றாவது அலை வரக்கூடும் என்று காரணம் காட்டி இந்து பண்டிகைகளைக் கொண்டாட கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. எனினும் முதல்வர் ஜகன் மோகனின் தந்தை மறைந்த ராஜசேகர ரெட்டியின் நினைவுநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சமீபத்தில் மொஹரம் பண்டிகை கொண்டாட்டங்களுக்கும் விதி விலக்குகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Source: Hindu Post
Image Courtesy: Twitter