உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்!
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்!
By : Kathir Webdesk
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்தநிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹியை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்றுக் கொண்டார்,கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஏ.பி.சஹி பதவியேற்பைத் தொடர்ந்து ஆளுநர், முதலமைச்சர், சபாநாயகர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.