மாநிலங்களவை எம்.பி ஆக சுதா மூர்த்தி நியமனம் - பெண் சக்திக்கான சான்று என்று பிரதமர் மோடி புகழாரம்!
மாநிலங்களவை எம்பி ஆக இன்போசிஸ் நிறுவன தலைவரின் மனைவி சுதாமூர்த்தி நியமனம்.
By : Karthiga
இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதாமூர்த்தியை மாநிலங்களவைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்து உள்ளார் .இது பெண் சக்திக்கான சான்று என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நரேந்திர மோடி சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது பதிவில் "இந்திய குடியரசு தலைவர் சுதா மூர்த்தியை மாநிலங்களவைக்காக பரிந்துரைப்பது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். சமூக சேவை ,தொண்டு மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் சுதா அவர்களின் பணி மகத்தானது மற்றும் ஊக்கமளிக்க கூடியது .மாநிலங்களவையில் அவரது இருப்பு நமது பெண் சக்திக்கு சிறந்த சான்றாகும். மேலும் நாட்டின் தலைவிதியை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் திறமைக்கான எடுத்துக்காட்டாகும். அவரது நாடாளுமன்ற பயணம் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்த 12 பேரை மாநிலங்களவை உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார். சுதா மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனரான நாராயண மூர்த்தியின் மனைவி இங்கிலாந்து பிரதமர் மனைவியான அக்ஷதா மூர்த்தியின் தாயுமாவார்.
இவர் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த எழுத்தாளர். இவர் நாவல்கள், தொழில் நுட்ப புத்தகங்கள் மற்றும் பண கட்டுரைகளை எழுதியுள்ளார். தற்போது இந்தியாவில் இல்லாத சுதாமூர்த்தி தன்னை நியமனம் செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். 'இந்த மகளிர் தினத்தில் எனக்கு இது மிகப்பெரிய பரிசு. நாட்டுக்கு பணியாற்றுவதற்கான புதிய பொறுப்பு' என தெரிவித்துள்ளார்.
SOURCE :Thenellaitimes