Kathir News
Begin typing your search above and press return to search.

70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை:காங்கிரஸ் ஆட்சியில் சீரழிந்த வங்கிகள் கம்பீரமாக வலுவடைந்து நிற்கிறது- பா.ஜ.க ஆட்சியின் அசத்தல் சாதனை

Employment order for 70 thousand people: Degenerate banks stand majestically strong under Congress rule- Amazing feat of BJP rule

70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை:காங்கிரஸ் ஆட்சியில் சீரழிந்த வங்கிகள் கம்பீரமாக வலுவடைந்து நிற்கிறது- பா.ஜ.க ஆட்சியின் அசத்தல் சாதனை

KarthigaBy : Karthiga

  |  23 July 2023 5:15 AM GMT

70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழாவில் வங்கிகள் இப்போது வலுவடைந்துவிட்டன என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஒன்றிய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரோஜ்கர் மேளா வேலை வாய்ப்பு திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. நேற்று 70 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பாரன்ஸ் மூலமாக கலந்து கொண்டு பணிநியமான ஆணைகளை தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கு வழங்கினார்.


பின்னர் பேசிய பிரதமர் மோடி , "அதிகம் பேர் வங்கித் துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் வங்கித்துறைகள் பெரிதும் சீரழிக்கப்பட்டு இருந்தது. பா.ஜ.க தலைமையிலான அரசு சரியான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகின்றது. போன் பேங்கிங் ஊழல் கடந்த ஆட்சியில் நடந்த மிகப்பெரிய ஊழல்களில் ஒன்றாகும். இது வங்கித்துறையின் முதுகெலும்பை உடைத்து விட்டது. தங்களுக்கு பிடித்த சக்திவாய்ந்த தலைவர்கள் குடும்பங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் கடனாக வழங்கப்பட்டது. ஆனால் அந்த கடன்கள் ஒருபோதும் திரும்ப பெறப்படவில்லை.


நிர்வாகத்தை வலுப்படுத்துதல் சிறுவங்கிககளை ஒருங்கிணைத்தல் மற்றும் தொழில் திறனை புகுந்துதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் முன்பு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் மற்றும் செயல்படாத சொத்துக்களுக்கு பெயர் பெற்றிருந்தன. ஆனால் இப்போது அவை சாதனை லாபத்திற்கு பெயர் பெற்றுள்ளன. உலகளாவிய நம்பிக்கை மற்றும் ஈர்ப்பின் மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது.


அதை நாடு முழுமையாக பயன்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதிகார பேராசை தேசநலனை மீறும்போது ஏற்படும் அழிவுகளுக்கு பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ளன. முந்தைய அரசின் கீழ் வங்கி துறை இந்த அழிவை சந்தித்துள்ளது. ஆனால் தற்போது வலுவான வங்கித்துறையை கொண்ட நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE:DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News