கோவில் கலசம் திருட்டு-அறநிலையத்துறையின் அலட்சியத்தால் அவலம்!
30 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இந்த கோவில் கோபுரத்தின் மேல் உள்ள மூன்று கலசங்களில் இரண்டு கலசங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
By : Shiva
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் உள்ள கலசம் மர்ம நபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே சந்தப்பேட்டை பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. 30 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இந்த கோவில் கோபுரத்தின் மேல் உள்ள மூன்று கலசங்களில் இரண்டு கலசங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
பொதுமக்களின் புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோவில் கலசத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 30 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவிலில் உள்ள கலசம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கோவிலில் திருடப்பட்ட கலசத்தை உடனடியாக காவல்துறையினர் மீட்க வேண்டும் என்றும் இது போன்ற திருட்டு சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து கோவில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கோவில்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் இருந்து வரும் நிலையில் தற்போது கோபுர கலசத்தையே கொள்ளையடிக்கும் அளவுக்கு துணிகர செயலில் ஈடுபட்டுள்ளதால் இந்து அறநிலையத்துறையும் அனைத்து கோவில் நிர்வாகங்களும் கோவில்களில் சிசிடிவி கேமராவை பொருத்தி பாதுகாப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Source : Dinamani
Image courtesy: Dinamani