Kathir News
Begin typing your search above and press return to search.

விமர்சையாக நடைபெற உள்ள ரத சப்தமி விழா: ஏற்பாடுகள் தீவிரம்!

விமர்சியாக நடைபெற உள்ள ரத சப்தமி விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக கொண்டுள்ளார்.

விமர்சையாக நடைபெற உள்ள ரத சப்தமி விழா: ஏற்பாடுகள் தீவிரம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  31 Jan 2022 2:09 AM GMT

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் விமரிசையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றாக ரத சப்தமி விழா விளங்குகிறது. இவ்விழாவில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் அரசவல்லியில் அமைந்துள்ள சூரிய பகவான் ஸ்ரீ சூரிய நாராயண ஸ்வாமியின் வரலாற்று சிறப்புமிக்க சூரியக் கடவுள் கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி 8-ம் தேதி ரத சப்தமி விழா நடைபெற உள்ளது. மேலும் இதை காண்பதற்காக லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தர இருப்பதாகவும் எதிர்பார்க்கப் படுகிறது.


இவ்விழாவில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவை குறிப்பாக சூர்ய ஜெயந்தி என்றும் அழைக்கிறார்கள். இந்த விழா தொடர்பான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைமை அர்ச்சகர் இப்பிலி சங்கர சர்மாவுடன் செய்தியாளர்களிடம் பேசிய கோயில் செயல் அலுவலர் V.ஹரி சூர்யபிரகாஷ், சீரமைப்புப் பணிகள், அலங்காரம், வரிசைகளில் தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.


மேலும் தற்பொழுது உள்ள நோய் தொற்றுகளை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வைரஸ் பரவுவதைத் தடுக்க கோவிட்-19 நெறிமுறையைப் பின்பற்றுமாறு மக்களை அவர்கள் வலியுறுத்தினார். கூட்டத்தில் கோவில் அறங்காவலர்கள் மந்தவில்லி ரவி, யமிஜலா காயத்ரி, கிஞ்சராபு உஷாராணி, ஜி.ராஜராஜேஸ்வரி, பைடி பவானி, மண்டல மன்மதராவ் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: The Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News