வழக்கறிஞர் வில்சனை எம்.பி-யாக தேர்ந்தெடுத்ததற்கு, பாதிரியார்கள் ஸ்டாலினுக்கு நேரில் நன்றி தெரிவித்தனர்
வழக்கறிஞர் வில்சனை எம்.பி-யாக தேர்ந்தெடுத்ததற்கு, பாதிரியார்கள் ஸ்டாலினுக்கு நேரில் நன்றி தெரிவித்தனர்
By : Kathir Webdesk
வழக்கறிஞர் வில்சன் தி.மு.க சார்பில் மாநிலங்களவை எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக, தங்களது மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு எம்.பி. சீட் வழங்க வேண்டும் என்று தி.மு.க-விடம் கிறிஸ்துவ பாதிரியார்கள் கேட்டுகொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த நிலையில் தான், அவர் தி.மு.க சார்பில் மாநிலங்களவை எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், ரோமன் கத்தோலிக்க திருச்சபை, சி.எஸ்.ஐ, டி.இ.எல்.சி. ஆகிய தேவாலாயங்களை சேர்த்த பாதிரியார்கள், தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
மதச்சார்பின்மைக்காக குரல் கொடுக்கும் தி.மு.க பெரும்பாலும் சிறுபான்மை சமூகங்களுக்கு ஆதராவாக இருக்க ஹிந்து உணர்வுகளை புண்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகிறது. தி.மு.க தற்போது, கிறிஸ்தவர்களின் பக்கம் சாய்ந்துள்ளதை அடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.