இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வதினால் இத்தனை நன்மைகளா?
இஞ்சியை உணவில் அளவோடு சேர்த்துக் கொள்வதினால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி காண்போம்.
By : Karthiga
இஞ்சி சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏகப்பட்ட பயன்கள் கிடைக்கிறது. தினமும் உணவில் இஞ்சி சேர்த்துக் கொள்வதினால் செரிமான கோளாறுகள் நீங்கி நல்ல ஆரோக்கியமான உடலைத் தருகிறது. இஞ்சி துவையல் ,இஞ்சி சட்னி,இஞ்சி டீ போன்றவை உணவிற்கு சுவை கூட்டுவதுடன் உடல் நலத்தையும் மேம்படுத்துகிறது . இஞ்சி மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குது.
'காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு மாலையில் திப்பிலி' அப்படின்னு இலக்கிய பாடல் ஒன்று இஞ்சியின் மகத்துவத்தை நமக்கு விளக்குகிறது. இஞ்சி சாப்பிட்டால் நல்லதுன்னு சொல்றாங்கன்னு ஓவராவும் நீங்க சாப்பாட்டுல இஞ்சியை பயன்படுத்திக் கொண்டே இருக்கக் கூடாது. அதே சமயம் அளவுக்கு அதிகமாகவும் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதுவும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அளவுக்கு அதிகமா இஞ்சிய உணவுல சேர்த்தாலும் நெஞ்செரிச்சல் வரவும் வாய்ப்பு இருக்கு.
ரொம்ப அதிகமா நீங்க இஞ்சி சாப்பிட்டுக்கிட்டே இருந்தா வயிற்றுப்போக்கு குடலில் புண் ஏற்படவும் வாய்ப்பு இருக்கு .எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான். அளவோடு இருந்தா தான் அது மருந்து, அமிர்தம். தினமும் ஒரு வேலை இஞ்சியை உணவில் அளவோடு பயன்படுத்தி வளமோடு வாழனும்.