Kathir News
Begin typing your search above and press return to search.

இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்ல அனுமதி உண்டா? நிதின் கட்காரி பதில்

இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி விடுத்த கோரிக்கைக்கு மத்திய மந்திரி நிதின் கட்காரி பதில் அளித்துள்ளார்.

இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்ல அனுமதி உண்டா? நிதின் கட்காரி பதில்

KarthigaBy : Karthiga

  |  5 Jun 2023 3:30 PM GMT

இருசக்கர வாகனம் என்பது இருவர் பயணிக்கத் தான். ஆனால் இரு சக்கர வாகனங்களில் 10 வயது உட்பட்ட ஒரு குழந்தையையும் சேர்த்து மூன்று பேர் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அண்டை மாநிலமான கேரளாவில் பலராலும் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தை திருத்தலாமா என்று கூட கேரளாவில் உள்ள இடதுசாரி அரசு எண்ணியது .


இது தொடர்பாக கடந்த மாதம் ஒன்றாம் தேதி மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரிக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி இளமாறம் கரீம் கோரீக்கை விடுத்து கடிதம் எழுதினார். வாகன ஓட்டி உள்ளிட்ட மூன்று பேரும் பாதுகாப்பு அம்சங்களுடன் இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று அவர் கூறியிருந்தார்.


குறிப்பாக "நாட்டில் பெரும்பாலானவர்கள் தங்கள் அன்றாட பயணத்துக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். எல்லோராலும் கார் வாங்க முடியாது. எனவே இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் செல்ல அனுமதிக்கலாம்" என வலியுறுத்தி இருந்தார். ஆனால் மத்திய மந்திரி நீதின் தற்காரியை அந்த கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்து விட்டார்.


இது தொடர்பாக அவர் இளமாறும் கரீமுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-மதியம் மோட்டார் வாகன சட்டம் 1998ல் இருசக்கர வாகனம் ஓட்டுகிறவர் தனது வாகனத்தில் மேலும் ஒரு நபருக்கு மேல் ஏற்றி செல்ல அனுமதி இல்லை எனவே வாகன ஓட்டியின் பாதுகாப்பு அம்சத்தின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்கிறவர் தனது வாகனத்தில் ஒருவருக்கு மேலானவரை ஏற்று செல்ல அனுமதிப்பது புத்திசாலித்தனம் அல்ல. உலகம் எங்கும் இருசக்கர வாகனங்கள் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க ஏற்ற விதத்தில் வடிவமைத்து உருவாக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News