Kathir News
Begin typing your search above and press return to search.

எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பை ராணுவம் அனுமதிக்காது - அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்

இலையில் சீனாவின் ஆக்கிரமிப்பை இந்திய ராணுவம் அனுமதிக்காது என மதிய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பை ராணுவம் அனுமதிக்காது - அமைச்சர்  ஜெய்சங்கர் திட்டவட்டம்

KarthigaBy : Karthiga

  |  20 Dec 2022 11:45 AM GMT

கிழக்கு லடாக்கை தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தில் நடந்துள்ள சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை இந்தியாவை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் சீனாவுடன் எல்லைப் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் சீனாவில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை இந்திய ராணுவம் அனுமதிக்காது என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார். டெல்லி நடந்த இந்திய ஜப்பான் கருத்தரங்கில் பங்கேற்று பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


சீன எல்லையில் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான ராணுவத்தை குவித்து இருக்கிறோம். 2020 ஆம் ஆண்டு முதல் சீனா குவித்து வரும் படைகளுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பிரதமர் மோடி உத்தரவின் பேரில் இந்த படைகுவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் நாங்கள் சொன்னதால்தான் ராணுவம் அங்கு சென்று இருக்கிறது. ராகுல்காந்தி போகச் சொன்னதால் ராணுவம் அங்கு செல்லவில்லை .இந்திய பிரதமர் அவர்களை போக சொன்னதால் ராணுவம் அங்கு சென்றிருக்கிறது. இயல்பு நிலையை ஒரு தலைப்பட்சமாக மாற்றும் எந்த முயற்சியையும் முறியடிக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது.அங்கு சீனாவின் ஆக்கிரமிப்பு அனுமதிக்க கூடாது என்பதில் ராணுவம் உறுதியாக இருக்கிறது. எல்லையில் அத்துமீற எந்த நாட்டையும் அனுமதிக்க மாட்டோம் என்பது இந்திய அரசின் கடமை மற்றும் இந்திய ராணுவத்தின் கடமை மற்றும் அர்ப்பணிப்பாகும்.


இந்த பரபரப்பான சூழலில் சீனாவில் இருந்து ஏன் இறக்குமதிகள் அனுமதிக்கப்படுகின்றன என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் உற்பத்தி துறையில் போதிய கவனம் செலுத்தாததால் அந்த நாட்டிலிருந்து இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்கிறது.30 ஆண்டுகளாக உங்கள் தொழிலுக்கு கொடுக்க வேண்டிய ஆதரவையும் பாதுகாப்பையும் நீங்கள் கொடுக்கவில்லை. இப்போதுதான் நீங்கள் அதை தொடங்கியிருக்கிறீர்கள். முப்பது ஆண்டுகளில் செய்ததை இப்போது ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் மாற்ற முடியாது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.








Next Story
கதிர் தொகுப்பு
Trending News