இளைஞர்களுக்கு அரசு வேலை - பல வருடமாக மூடப்பட்ட பள்ளி, கோவில்கள் விரைவில் திறப்பு : காஷ்மீர் விவகாரத்தில் அரசின் அடுத்த அதிரடி!
இளைஞர்களுக்கு அரசு வேலை - பல வருடமாக மூடப்பட்ட பள்ளி, கோவில்கள் விரைவில் திறப்பு : காஷ்மீர் விவகாரத்தில் அரசின் அடுத்த அதிரடி!
By : Kathir Webdesk
தீவிரவாத நடவடிக்கையின் காரணமாக காஷ்மீர் மாநிலத்தில் மூடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் கோவில்கள் மீண்டும் திறக்கப்படும் என்று மத்திய அமைச்சர் Kishan Reddy தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜம்மு-காஷ்மீர் மக்களிடம் ஆய்வறிக்கை மேற்கொண்டு, தீவிரவாதத்தால் சிதைந்த பள்ளிகள், கோவில்கள், சிலைகள் குறித்த தகவல் திரட்டப்பட்டு, மீண்டும் அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கத்தில் தற்போது ஒரு திரையரங்குகள் கூட இல்லை. 20 வருடங்களாக அவை மூடப்பட்டே கிடக்கின்றன. காஷ்மீர் மாநிலத்தில் ஏராளமான அரசு நிலங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. அவற்றில் விருப்பமுள்ளவர்கள் கல்வி நிறுவனம் தொடங்கலாம். மேலும் கிராமத்திற்கு 5 பேர் வீதம் அரசு பணியில் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர்.
இந்திய முப்படைகளும், வேலைவாய்ப்பு முகாம் நடத்தி இளைஞர்களை தேர்வு செய்து வருகின்றனர். காஷ்மீரில் சுற்றுலாதுறை மேம்படவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ஊழல் தடுப்பு ஆணியம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்த நிதிகள் பாதிக்கும் மேல் மக்களிடம் சென்று சேரவில்லை. அதற்கான காரணம் குறித்து அறிய இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
அடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பக்கமும், அரசின் நடவடிக்கை தொடர உள்ளது. விரைவில் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லாம் சேர்த்து இந்தியாவின் ஒருகிணைந்த பகுதியாக மாற்றப்பட உள்ளது.