Kathir News
Begin typing your search above and press return to search.

மக்கள் குறைதீர்க்க கமலாலயத்தில் எம்.பி எம்.எல்.ஏ'க்களுக்கு அறைகள் - பா.ஜ.க'வின் அதிரடி மாறுதல்கள்

மக்கள் நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம். கமலாலயத்தில் எம்.பி எம்.எல்.ஏ க்களுக்கு அறைகள் ஏற்பாடு-அண்ணாமலை அறிவிப்பு

மக்கள் குறைதீர்க்க கமலாலயத்தில் எம்.பி எம்.எல்.ஏக்களுக்கு அறைகள் - பா.ஜ.கவின் அதிரடி மாறுதல்கள்

KarthigaBy : Karthiga

  |  2 Sep 2022 9:45 AM GMT

தமிழக பா.ஜ.க தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை தியாகராய நகரில் அமைந்திருக்கும் தமிழக பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். சிலர் குறைகளுடன் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற மற்றும் புதிய சிந்தனைகளை அரசிடம் எடுத்துச் எடுத்துச் செல்லும் நோக்கில் என வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும்.

தொகுதிக்கு அப்பாற்பட்டு நமது மாநிலத்தின் நலனுக்காகவும் பலமுறை நமது எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுத்துள்ளனர்.நமது மத்திய இணை மந்திரி வேல்முருகன் நாடாளுமன்றத்தில் தமிழக மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறார்.


இவற்றைக் கருத்தில் கொண்டு மத்திய இணை மந்திரி எல். முருகன் சட்டமன்ற பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வானதி ஸ்ரீனிவாசன், எம்.ஆர்.காந்தி,சி.கே சரஸ்வதி ஆகியோருக்கு நமது அலுவலகத்தில் அறைகள் வழங்கப்பட்டுள்ளது. நமது எ.ம்பி மற்றும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து தங்கள் குறைகளுக்கு தீர்வு காண விரும்பும் மக்கள் தமிழக பா.ஜ.க தலைமை அலுவலக செயலாளர் சந்திரனை 9445354922 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News