முன்னாள் அமைச்சர், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை கைது செய்த அமலாக்கத்துறை பின்னணி என்ன?
முன்னாள் அமைச்சர், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை கைது செய்த அமலாக்கத்துறை பின்னணி என்ன?
By : Kathir Webdesk
முன்பு பணடி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கோடி கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் நிதிமுறைகேட்டு வழக்கு தொடர்பாக கர்நாடகாவின் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவருமான டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்தது.
ஆகஸ்ட் 30ம் தேதி முதல் சுமார் 30 மணி நேர விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறை டி.கே.சிவக்குமாரைக் கைது செய்தது. செப்டம்பர்.3ம் தேதி சிவக்குமார் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு 4வது சுற்று விசாரணைக்காகச் சென்றிருக்கிறார். அப்போது மாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர்.4ம் தேதி, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிரார்” என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டி.கே.சிவக்குமார் வீட்டில் சிக்கிய ரூ.8.50 கோடி குறித்து அமலாக்கத்துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரியும், அமலாக்கத்துறையில் பதிவான வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும் கர்நாடக ஐகோர்ட்டில் டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்ததுஇந்நிலையில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அதிகாரிகள் மீண்டும் சம்மன் வழங்கினார்கள். இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார். அமலாக்க துறை கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு பின் பதிலளித்துள்ளார். பின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உளறி இருக்கிறார் 4 நாட்கள் அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த நிலையில், சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கில் டிகே சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
மேலும் இது தொடர்பாக சில சாட்சிகளையும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.