பிரதமர் மோடி ஆப்கானிஸ்தானுக்கு செய்த உதவி - இந்தியாவை பாராட்டிய தலிபான்கள்!
Appreciate India for helping Afghan people, says Taliban; denies ties with Pak-based terror groups
By : Muruganandham
ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிப் பணிகளுக்காகவும், அந்நாட்டு மக்களுக்காகவும் பல கோடி ரூபாய் செலவிட்டுள்ளது இந்தியா.
ஆப்கானிஸ்தானில் இந்திய அரசால் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சல்மா அணை கட்டித்தரப்பட்டது. ஹீரத் மாகாணத்தில் ஹரி ஆற்றின் மீது கட்டப்பட்ட இந்த அணையை 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடியும், ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனியும் இணைந்து திறந்து வைத்தனர்.
அதற்கு முன்னதாக குண்டு வெடிப்பில் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றக் கட்டடம் சேதமடைந்திருந்தது. அதனை கடந்த 2015ஆம் ஆண்டு சீரமைத்து பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதனிடையே கடந்த சில நாட்களில் இந்தியா கட்டிக்கொடுத்த சல்மா அணை மீது தலிபான்கள் தாக்குதல் நடத்திய நிலையில், அந்த தாக்குதலை ஆப்கன் அரசுப் படைகள் முறியடித்தது.
தற்போது ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலிபான் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இதனை தொடர்ந்து தலிபான் செய்தித்தொடர்பாளர் முகமது சுகைல் ஷாஹீன் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்த பேட்டியில், ஆப்கன் மக்களுக்கும், நாட்டின் நலத்திட்டங்களுக்காகவும் இந்தியா உதவி வந்திருக்கிறது.
ஆப்கன் மக்களின் நலனுக்காக அணைகள் கட்டித்தந்ததாகட்டும், தேசிய மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி, புனரமைப்பு மற்றும் பொருளாதார செழிப்பு போன்ற இந்தியாவின் உதவி எதுவாகினும் அதனை நாங்கள் பாராட்டுகிறோம் என கூறினார்.
மேலும் எந்த நாட்டின் தூதரகங்களை நாங்கள் தாக்க மாட்டோம் எனவும், தூதரக அதிகாரிகளுக்கு எங்களால் ஆபத்தில்லை எனவும் அவர் உறுதியளித்தார்.