Kathir News
Begin typing your search above and press return to search.

அத்திவரதர் வைபவத்தின் போது பாதுகாப்பு சேவை புரிந்த காவல்துறையினருக்கு 2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை

அத்திவரதர் வைபவத்தின் போது பாதுகாப்பு சேவை புரிந்த காவல்துறையினருக்கு 2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை

அத்திவரதர் வைபவத்தின் போது பாதுகாப்பு சேவை புரிந்த காவல்துறையினருக்கு 2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Aug 2019 10:03 AM GMT

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி ஆக.17 -ஆம் தேதி வரைதொடர்ந்து 48 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி ஜூலை மாதம் முழுவதும் 31 நாள்களுக்கு பெருமாள் சயனக்கோலத்திலும், ஆக. 1 -ஆம் தேதி முதல் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் 47 -ஆவது நாளான கடந்த வெள்ளிக்கிழமை பெருமாள் வெந்தய நிறப் பட்டாடையும், ரோஜா நிற அங்கவஸ்திரமும் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாளுக்கென்று பிரத்யேகமாக செய்யப்பட்டிருந்த பாதாம்பருப்பு, முந்திரி மாலையும், கதம்ப மாலைகளும் அணிந்திருந்தார்.
சகஸ்ர நாம அர்ச்சனை கோயில் பட்டாச்சாரியார்களால் நடத்தப்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் ராஜகோபுர வாசல் மூடப்பட்டது. அப்போது கோவில் வளாகத்திற்குள் காத்திருந்த பத்தர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இரவில் நீண்ட நேரம் தரிசனம் நீடித்தது. அதன்பின்னர் அன்று இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைந்தது.
வெள்ளிக்கிழமை வரை அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கடந்த 48 நாட்களாக அத்திவரதர் கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருவள்ளூர் போலீசாருக்கு ஊதியத்துடன் 2 நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 48 நாள் பாதுகாப்பு பணி செய்த 500 க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு இன்றும் நாளையும் விடுமுறை என எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News