குருத்வாரா கோவில் மீது தாக்குதல் நடத்திய IS அமைப்பு, பின்னணி இதுதான்!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கியர் கோயில் மீது தாக்குதல் நடத்தியதாக ஐ.எஸ் அமைப்பினர் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
By : Bharathi Latha
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கியர் கோவில் தற்போது தீ விபத்துக்கு உள்ளாகி உள்ளது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் காபூலின் பாக்-இ பாலா சுற்றுப்புறத்தில் உள்ள குருத்வாராவிலிருந்து கறுப்பு புகை எழுவதைக் காட்டியது. அதே நேரத்தில் துப்பாக்கிச் சூடும் கேட்கப்பட்டது. சனிக்கிழமை பிற்பகுதியில் அதன் Amaq இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் IS அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. சீக்கியர் மற்றும் இந்து கோவில் மீதான தாக்குதல் முஹம்மது நபிக்கு எதிராக இழிவுபடுத்தப்பட்டதாக கூறப்பட்டதற்கு பதிலடியாக நடத்தப்பட்டதாக அது கூறியது.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள சீக்கியர் கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு குழு பொறுப்பேற்றுள்ளது. அதில் குறைந்தது ஒரு வழிபாட்டாளர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். சீக்கிய மற்றும் இந்து கோவில் மீதான தாக்குதல் இஸ்லாமிய மதத்தின் மைய நபரான முகமது நபிக்கு எதிராக இந்திய அரசாங்க அதிகாரியால் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதற்கு பதிலடியாக இருந்தது. அது அதிகாரியின் பெயரை குறிப்பிடவில்லை. குருத்வாரா என அழைக்கப்படும் சீக்கிய வழிபாட்டு இல்லத்தின் மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் சனிக்கிழமை காலை தாக்குதல் நடத்தினர், மேலும் கட்டிடத்தைப் பாதுகாக்க முயன்ற தாலிபான் போராளிகளுக்கும் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் கோவிலுக்கு வெளியே வெடிக்கப்பட்டது, ஆனால் அதனால் உயிர் சேதம் ஏற்படவில்லை. அதற்கு முன், துப்பாக்கி ஏந்திய நபர்கள் கைக்குண்டை வீசியதால், கோவில் வாயில் அருகே தீ விபத்து ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்தியாவில் முகமது நபிகள் குறித்த கருத்து போராட்டம் காரணமாக இத்தகைய நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இந்துக்களின் கோவில்கள் தாக்கப்பட்டதாகவும் தீவிரவாத அமைப்புகள் செய்திகளை வெளியிட்டு உள்ளது.
Input & Image courtesy: News 18