சுய ஊரடங்கு, நாடு முழுவதும் வரலாறு காணாத ஆதரவு !
சுய ஊரடங்கு, நாடு முழுவதும் வரலாறு காணாத ஆதரவு !

கொரோனா நோயை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி, நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மார்ச் 22ஆம் தேதி, 'சுய ஊரடங்கு' முறையை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், 'சுய ஊரடங்கு' போது ஆட்டோக்கள் ஓடாது என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அரசு எடுத்துள்ள சுய ஊரடங்கு நடவடிக்கைக்கு ஆதரவு தரும் வகையில் 'ஒரு நாள் முழுவதும் ஆட்டோக்கள் ஓடாது ' என்பதை அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக தெரிவிப்பதாக பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
உணவகங்கள், வணிகர்கள், வியாபாரிகள் போன்ற அனைத்து தரப்பினரும் பிரதமரின் அழைப்பிற்கு வரவேற்பு தெரிவித்தனர். நாடு முழுவதும் வரலாறு காணாத ஒத்துழைப்பு.