Kathir News
Begin typing your search above and press return to search.

கறந்த பாலில் பறவை காய்ச்சல் வைரஸ் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

கறந்த பாலில் பறவை காய்ச்சல் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் உலக சுகாதார நிறுவனம் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கறந்த பாலில் பறவை காய்ச்சல் வைரஸ் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

KarthigaBy : Karthiga

  |  22 April 2024 3:12 AM GMT

பறவைக்காய்ச்சல் அல்லது எச்.5.N1 எனப்படும் வைரஸ் கறந்த பாலில் இருப்பதை உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.அந்நாட்டின் 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில் பராமரிக்கப்படும் மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பரவி இருக்கிறது.

இந்த நிலையில் கரந்த பாலில் பறவை காய்ச்சலை பரப்பும் எச்.5.n1 வைரஸ் இருப்பது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே கறந்த பாலை அருந்துவதை தவிர்க்குமாறும் சுத்திகரிக்கப்பட்ட பாலை அருந்துவதே பாதுகாப்பானது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது .பாலில் இருக்கும் கொடிய கிருமிகளை சுத்திகரிப்பு மூலம் அழித்து விடலாம். இது மிகவும் எளிதானதும் கூட .தற்போது பரவி வரும் பறவை காய்ச்சல் வைரஸ் ஆனது பறவைகள் விலங்குகள் மனிதர்களிடையே பரவி வருகிறது. இந்த வைரஸ் ஆனது மிக எளிதாக மனிதர்களுக்கு பரவி அவர்களை கொள்கிறது.

இது தற்போது வவ்வால்கள் ,பூனைகள், கரடி ,நரி, பென்குயின்களுக்கும் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் பறவை காய்ச்சல் பரவும் விலங்குகளின் பட்டியலில் மாடு சேர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழாவிலும் பறவை காய்ச்சல் பரவி வருவது சுகாதார அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கோழிகளுக்கு மட்டும் பரவி வந்த பறவை காய்ச்சல் அங்குள்ள வாத்துகளுக்கும் பரவி இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.


SOURCE :makkalkural

Next Story
கதிர் தொகுப்பு
Trending News