அனைவரும் செய்யக்கூடிய இந்த தப்பினால், ஏற்படும் மிகப்பெரிய விளைவுகள்.!
By : Bharathi Latha
மாற்றம்கொண்ட உணவுமுறையாலும், வாழ்க்கைமுறையாலும் நம்மில் பெரும்பாலானோருக்கு தலைவலி, கால்வலி, மூட்டுவலி என ஏதேனும் ஒரு பிரச்சினை இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. தினமும் உடலில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கு எல்லாம் நாம் மருத்துவரிடம் செல்வதில்லை. சிலர் மட்டுமே மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்ற பின்னர் மருந்துகளை வாங்கி எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், பலரும் அவர்களே நேரடியாக மருந்துக் கடைகளுக்குச் சென்று உடலில் உள்ள பிரெச்சனைகளைச் சொல்லி மருந்தை வாங்கி சாப்பிடுகிறார்கள்.
ஆனால் அது சரியான முறை இல்லை. முக்கியமாக நாமாக மருந்தகங்களுக்குச் சென்று மருந்து வாங்கும்பொழுது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மருந்து அட்டைக்குப் பின் என்ன இருக்கிறது என்பதை நாம் அதிகம் பார்ப்பதே இல்லை. மருந்து அட்டையின் பின்புறத்தில் பல குறியீடுகள் உள்ளன. அதை பற்றி நாம் தெரிந்துக்கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும். மருத்துவரிடம் ஆலோசிக்காமல் அவசரத்திற்கு ஒரு மருந்துக் கடையில் நீங்கள் வாங்கும் மருந்து என்றாலும், முதலில் மருந்து அட்டையைச் சரிபார்க்கவும். அதன் காலாவதி தேதியைச் சரிபார்க்க வேண்டும்.
மற்றொரு மிக முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் மருந்து அட்டையின் பின்புறத்தில் இருக்கும் சிவப்பு கோடு. அது போன்ற சிவப்பு கோடு இருந்தால் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் அந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆனால், நாம் முன்னெச்சரிக்கையுடன், அது போன்ற சிவப்பு நிற கோடுகள் இருந்தால் வாங்க கூடாது. அது போன்று சிவப்பு கோடுகள் இருந்தால் அது ஆன்டிபயாடிக் மருந்து ஆகும். அதை அனுபவம் பெற்ற மருத்துவரின் ஆலோசனை இன்றியோ, தெரியாமல் அதிகப்படியான அளவு எடுத்துக்கொண்டாலோ உயிருக்கு ஆபத்தானதாகிவிடவும் வாய்ப்புகள் உண்டு.