Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்தி ராமர் கோவில் பணிகள் விறுவிறு - திறப்பு விழா எப்போது தெரியுமா?

அயோத்தி ராமர் கோவில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பக்தர்களுக்கு திறந்துவிடப்படும் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அயோத்தி ராமர் கோவில் பணிகள் விறுவிறு - திறப்பு விழா எப்போது தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  26 Oct 2022 2:15 PM GMT

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமச்சந்திர பூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ராமர் கோவில் கட்டுமான பணிகள் 50% முடிவடைந்து விட்டன. கட்டுமான பணிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றம் திருப்தி அளிக்கிறது.அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் கோவிலின் தரைத்தளம் தயாராகிவிடும். 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி மகர சங்கராந்தி நாளில் கோவில் கர்ப்ப கிரகத்தில் ராமர் சிலைகள் நிறுவப்படும். அதை தொடர்ந்து அதே மாதத்தில் ராமர் கோவில் பக்தர்களுக்கு திறந்து விடப்படும். கோவில் கட்டி முடிப்பதற்கு மொத்தம் ரூ.1800 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கோவிலில் பிரபலமான இந்து மடாதிபதிகள் சிலைகள் வைப்பதற்கு இடம் ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News