ஆறு அடி இடைவெளியில் சிறப்பு அழைப்பாளர்கள் - ராம ஜென்ம பூமியில் பூமி பூஜை இடத்திற்கு பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வருகை!
ஆறு அடி இடைவெளியில் சிறப்பு அழைப்பாளர்கள் - ராம ஜென்ம பூமியில் பூமி பூஜை இடத்திற்கு பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வருகை!

ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்வில் பிரதமர் மோடி உள்ளிட்ட 175 சிறப்பு அழைப்பாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர். கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அழைப்பாளர்கள் ஆறு அடி இடைவெளியில் அமர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடைபெறுகிறது. . 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை, கருவறை அமையும் இடத்தில் வைத்து, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
விழாவில், முக்கிய விருந்தினராக , அயோத்தி நிலம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த, அன்சாரி பங்கேற்கிறார். கொரோனா பரவல் காலம் என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு 175 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.
மேடையில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ராமர் கோயில் டிரஸ்ட் தலைவர் நிருத்ய கோபால்தாஸ் மகாராஜ், உத்தரபிரதேச கவர்னர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் அமர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சற்று முன்னர் ராம் லல்லாவில் உள்ள ராமர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
#WATCH Prime Minister Narendra Modi offers prayers to Ram Lalla, performs 'sashtang pranam' (prostration) at Ram Janmabhoomi site in Ayodhya pic.twitter.com/G6aNfMTsLC
— ANI (@ANI) August 5, 2020