அயோத்தி ராமர் கோவிலில் தொடங்கிய மூன்றாம் கட்ட கட்டுமான பணிகள்!
அயோத்தி ராமர் கோயில் தற்போது மூன்றாம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
By : Bharathi Latha
பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு, உத்திரப் பிரதேசம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. தற்பொழுது கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது மூன்றாம் கட்ட கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக ஸ்ரீராம் ஜென்மபூமி தீரத்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் அவர்கள் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். மேலும் இப்போது தான் இந்த கட்டுமான பணிகள் முழுமையாக முடியும் என்று பக்தர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் பக்தர்களின் வசதிக்காக அயோத்தியில் தற்பொழுது புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இதைப்பற்றி ஸ்ரீ ராம ஜென்ம பூமியில் அறக்கட்டளையின் செயலாளர் மேலும் கூறுகையில், தற்போது ராமர் கோயிலில் பீடம் அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு, பெரும்பாலான கட்டுமானப் பணிகள் நிறைவடைய உள்ளன. முதலாம் மற்றும் இரண்டாம் கட்டுமான பணிகளில், கோவிலில் அடித்தளம் மற்றும் தெப்பம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. மேலும் மூன்றாம் கட்ட பணிகளில் தற்போது பீடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன ஜூன் மாத இறுதியில் முடியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தற்பொழுது உள்ள மூன்று கட்டப் பணிகளை அறக்கட்டளை செயலர் சம்பத் ராய், நிர்வாகிகள் அனில் மிஸ்ரா, தீனேந்திர தாஸ் உள்ளிட்டோர் பூஜை செய்து தொடங்கி வைத்தனர். முன்னதாக யாகங்களும் நடைபெற்றன. மேலும் அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முழுமையாக 2023ம் ஆண்டில் நிறைவடைந்த பிறகு பக்தர்களுக்கு காட்சி படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
Input & Image courtesy: News