Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்தி தீர்ப்பு! மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய திருமாவளவன்,வேல்முருகன், திருமுருகன் காந்தி கைதா? உள்துறை அமைச்சகம் அதிரடி!

அயோத்தி தீர்ப்பு! மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய திருமாவளவன்,வேல்முருகன், திருமுருகன் காந்தி கைதா? உள்துறை அமைச்சகம் அதிரடி!

அயோத்தி தீர்ப்பு! மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய திருமாவளவன்,வேல்முருகன், திருமுருகன் காந்தி கைதா? உள்துறை அமைச்சகம் அதிரடி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Nov 2019 9:25 AM GMT


அயோத்தியில் ராமர் பிறந்த இடம் தொடர்பான வழக்கில் கடந்த 9-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இதன் மூலம் இந்து - முஸ்லிம் இடையே பல நூற்றாண்டுகளாக நீடித்து வந்த பிரச்சனை சுமூகமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், மக்களைப் பிரித்து மத கலவரத்தை தூண்டி குளிர்காய நினைத்த திருமாவளவன், வேல்முருகன், திருமுருகன் காந்தி கும்பல்கள் இதன் மூலம் மிகப்பெரிய மதக் கலவரம் வெடிக்கும், அதில் குளிர் காயலாம் என்று என்று எதிர்பார்த்தது நடக்காமல் போய்விட்டது. அவர்களின் நினைப்பில் மண்ணை போடுகின்ற வகையில் நாடே அமைதியாக இருந்தது. ஒரு சிறு அசம்பாவிதம் கூட ஏற்படவில்லை. அனைத்து தரப்பு மக்களும் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டனர். வரவேற்றனர். பாராட்டினர்.


இதனால் வெறுத்துப்போன திருமாவளவன், வேல்முருகன், திருமுருகன் காந்தி கும்பல்கள், தமிழகத்தில் அமைதியாக இருக்கின்ற இந்து - முஸ்லிம் சமுதாய மக்களிடையே பிளவை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் விதமாக, அயோத்தி தீர்ப்பை கண்டிக்கிறோம் என்ற பெயரில் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இதில் பழ.நெடுமாறன், திருமாவளவன், வேல்முருகன், திருமுருகன் காந்தி, தனியரசு, ஜவாஹிருல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள், அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் இந்து -முஸ்லிம் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளனர்.


இதனைத்தொடர்ந்து திருவல்லிக்கேணி போலீசார் திருமாவளவன், வேல்முருகன், திருமுருகன் காந்தி உள்பட 26 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி நடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


மத்திய உள்துறையின் உத்தரவின்படி, இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே திருமாவளவன் உள்பட 26 பேரும் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்கிறது போலீஸ் வட்டாரம்.


சமீபத்தில் திருமாவளவன், இந்து தெய்வங்களை இழிவாக பேசி பெரும் பிரச்சினைக்கு ஆளானார். அதுதொடர்பாக அவர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஒரு வழக்கு அவர்மீது பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News