Kathir News
Begin typing your search above and press return to search.

ஆயுர்வேதத்தின் படி, இரைப்பை தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு !

Ayurvedic treatments of stomach gas

ஆயுர்வேதத்தின் படி, இரைப்பை தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Sep 2021 12:33 AM GMT

தற்போதைய சூழலில், இரைப்பை தொடர்பான பிரச்சினைகள் ஒரு பொதுவான பிரச்சினையாகவே கருதப்படுகிறது. இதற்கு, முக்கிய காரணம் மக்களின் பொருத்தமற்ற வாழ்க்கை முறையே ஆகும். பெரும்பாலான மக்கள் சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை, இரவில் தாமதமாக தூங்குகிறார்கள், தினசரி உடற்பயிற்சி செய்வதில்லை. வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை விட பீஸ்ஸா மற்றும் பர்கர் போன்ற குப்பை உணவுகளையே நவீன காலத்து மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள். இது போன்ற வாழ்க்கை முறை பழக்கங்களின் விளைவாக வயிற்றில் வாயு மற்றும் அஜீரண கோளாறுகள் போன்ற இரைப்பை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.


நம் நாட்டின் பூர்வீக உணவு வகைகள் மிகவும் ஆரோக்கியமானது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும், உணவு உட்கொண்ட பின்னர் உடனடியாக தூங்குவதும் அஜீரணத்திற்கு வழிவகுக்கிறது. உட்கொண்ட உணவை ஜீரணிக்க உணவு உட்கொண்ட பின் லேசான நடைபயிற்சி தேவைப்படுகிறது. வயிற்றில் உண்டாகும் வாயு பிரச்சினைகளுக்கான தக்க சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் குடல் வீக்கம், வயிற்றில் நோய்த்தொற்றுகள், சிறுநீரக கற்கள் போன்ற பல சிக்கலான நோய்களுக்கு இது வழிவகுக்கிறது. மற்றும் நீங்கள் இரைப்பை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டால், ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இது போன்ற சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெற முடிகிறது.


இரைப்பை பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் இயற்கை மருந்துகள் இது. இஞ்சி, பல்வேறு வகையான உடல் சிக்கல்கள்களை கட்டுப்படுத்தப் பயன்படுகின்றது. இது வயிற்றில் உண்டாகும் வாயுவுக்கு சிகிச்சையளிக்கிறது. இரைப்பை பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் கிராம்பு நன்மை பயக்கிறது. உணவுக்குப் பிறகு ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளை எடுத்துக்கொள்வது வயிற்றில் உண்டாகும் அமிலத்தன்மையைக் குறைக்க பயனுள்ளதாக அமைகிறது. கருப்பு மிளகு பெரும்பாலும் இது உணவில் சுவைக்காகவே பயன்படுத்தப்படுகிறது. எனினும், கருப்பு மிளகு இரைப்பை தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க பயனுள்ளதாக அமைகிறது. தேனீரில் கருப்பு மிளகை சேர்த்து உட்கொள்ளும் போது இது போன்ற சிக்கல்கள் நீங்கும்.

Input:https://www.logintohealth.com/blog/en/lifestyle-diseases/ayurvedic-treatment-of-stomach-gas/

Image courtesy: wikipedia


Next Story
கதிர் தொகுப்பு
Trending News