Kathir News
Begin typing your search above and press return to search.

ராமர் கோவிலை இடித்து அதன் மேல்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது !! தொல்பொருள் ஆய்வாளர் கே.கே.முஹம்மது நீதிமன்றத்தில் முன் வைக்கும் ஆதாரங்கள் இதுதான்!!

ராமர் கோவிலை இடித்து அதன் மேல்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது !! தொல்பொருள் ஆய்வாளர் கே.கே.முஹம்மது நீதிமன்றத்தில் முன் வைக்கும் ஆதாரங்கள் இதுதான்!!

ராமர் கோவிலை இடித்து அதன் மேல்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது  !! தொல்பொருள் ஆய்வாளர் கே.கே.முஹம்மது நீதிமன்றத்தில்  முன் வைக்கும் ஆதாரங்கள் இதுதான்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Oct 2019 3:06 PM IST



ராம் ஜன்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் தற்போது அன்றாடம் விசாரணையை நடத்தி வருவதால், ராமர் கோவில் –பாபர் மசூதி பிரச்சினை தற்போது மீண்டும் தேசிய கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த பிரச்சினையில் இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் பலரும் தவறான, எதிரான கருத்துக்களை எடுத்து வைக்கும் நிலையில் கே.கே.முஹம்மது பல எதிர்ப்புக்கிடையில் தனித்து நின்று ஆதாரங்களுடன் ஸ்ரீராமர் கோவிலுக்கு ஆதரவாக பேசி வருவது இந்த விவகாரத்தில் ராம பக்தர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் முடிவெடுக்க வாய்ப்புண்டு என கருதப்படுகிறது.


இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஏ.எஸ்.ஐ) பிராந்திய இயக்குநராக பணியாற்றியவர் புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் கே.கே.முஹம்மது. இவர் அக்பரின் ஃபதேபூர் சிக்ரியில் மறைந்திருந்த இபாதத் கானா உள்ளிட்ட முக்கிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டார்.


இந்த நிலையில் இந்திய தொல்லியல் துறை சார்பில் இவர் ஆய்வு செய்தபோது பாபரி மஸ்ஜித்திற்கு கீழே ஒரு கோவில் இருப்பதைப் பற்றி அவர் குறிப்பிட்டது இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய பங்களிப்பாக பார்க்கப்படுகிறது. அவரது பங்களிப்புகளுக்காக அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும் இடது சாரிகள் சிந்தனையில் இருந்த பல வரலாற்றாசிரியர்கள் சொல்ல சங்கடமாக இருந்த கருத்துக்களை இவர் துணிந்து பேசியதால் இவர் பாராட்டப்பட்டார். இந்த விஷயத்தில் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான ஆனந்த் ரங்கநாதன் இவரைப் போலவே யாருக்கும் அஞ்சாமல் உண்மைகளைப் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில், ஒரு சமீபத்திய பேட்டியில் முஹம்மது தனது தைரியமான கூற்றுக்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


முஹம்மது 1976-77 ஆம் ஆண்டில் பி.பி லால் தலைமையிலான முதல் இந்திய தொல்பொருள் குழுவின் ஒரு பகுதியாக பணிபுரிந்தார். அப்போது பாபர் மஸ்ஜித் பகுதியில் அகழ்வாராய்வு செய்தபோது பாபர் மஸ்ஜிதிற்கு கீழே கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் மற்றும் எச்சங்கள் உள்ளன என்பதை நிரூபிக்க போதுமான தொல்பொருள் சான்றுகள் உள்ளன என்பதை வெளிக்கொணர்ந்ததாகவும், அதை இன்றையவரை வலுவாக பராமரித்து வருவதாகவும் கூறினார்.


மேலும் 1976-77 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட அந்த அகழ்வாராய்ச்சியின் போது, சர்ச்சைக்குரிய மசூதி கோவிலின் 12 தூண்கள் மற்றும் கோவிலின் சிதைக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கட்டப்பட்டிருப்பதையும், 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டு கோயில்களின் அடிவாரத்தில் காணப்படும் இந்து மதத்தில் அஷ்டமங்கல சின்ஹா என அழைக்கப்படும் நீர் குடம் வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட ஒரு பூர்ணா கலாஷா கட்டமைப்பை அவர் கண்டுபிடித்தாகவும் கூறினார்.


மேலும் பாபர் மசூதியின் மேற்குப் பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில், தனது குழு பல்வேறு டெரகோட்டா சிற்பங்களை கண்டுபிடித்தது என்றும் இதுபோன்ற டெரகோட்டா சிற்ப கட்டமைப்புகள் இஸ்லாத்தில் (ஹராம்) தடை செய்யப்பட்டவை என்பதால் இந்த இடம் கோவில் இருந்த இடம்தான் என்பதை நிரூபிப்பதாக அவர் திட்டவட்டமாக கூறினார்.


2003 ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல்துறை இந்த தளத்தில் மற்றொரு அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டது, ஆனால் இடையில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதால் இடிபாடுகளுக்கிடையே சிக்கல்கள் இருந்ததாகவும் என்றாலும் இந்த ஆய்வில் நிலத்தடியில் பல கட்டமைப்புகள் கிடைத்ததாகவும் முஹம்மது கூறினார்.


முதல் அகழ்வாராய்ச்சியில் 12 கோயில் தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், 2003 அகழ்வாராய்ச்சியில் 17 வரிசைகளில் 50 இந்து கோவில் தூண்களைக் கண்டறிந்தோம். இது பாபர் மசூதிக்கு முற்பட்ட காலத்திலேயே பெரிய கோவில் கட்டமைப்பு இருந்ததற்கான தன்மையை நிரூபிப்பதாக உள்ளதாக கூறினார்.


முஹம்மதுவின் கூற்றுப்படி, இந்த அகழ்வாராய்ச்சியில் தெய்வத்தை


தினமும் குளிப்பாட்ட பயன்படுத்தப்பட்ட பிரணாலா ஸ்தலமும் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு முதலை வடிவத்தில் இருந்த கோவிலின் பிரத்யேக பகுதி எனவும் குறிப்பிட்டார்.


அகழ்வாராய்ச்சியில் கோயிலின் பிற பகுதிகளான அமல்கா, கிரிவா மற்றும் ஷிகாரா போன்றவற்றையும் கண்டுபிடித்ததுடன், இந்து கடவுளர்கள் மற்றும் தெய்வங்களின் 263 துண்டுகள் கொண்ட டெரகோட்டா கட்டமைப்பு களையும் கண்டுபிடித்ததாகக் கூறினார். ராம் மந்திர் சர்ச்சையில் ஒரு இணக்கமான தீர்மானத்தை கொண்டுவர இர்பான் ஹபீப் மற்றும் ரோமிலா தாப்பர் போன்ற இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் தடுப்பதாக முஹம்மது அந்த பேட்டியில் கூறினார்.


முஸ்லீம் சமூகம் "இடதுசாரி வரலாற்றாசிரியர்களால் செய்யப்படும் மூளை சலவைக்கு இரையாகாமல் இருந்திருந்தால், பாபர் மசூதி பிரச்சினை நீண்ட காலத்திற்கு முன்பே தீர்க்கப்பட்டிருக்கும் என்று அவர் தனது புத்தகமான என்ஜான் என்ன பாரதியன் (நான், ஒரு இந்தியர்) என்ற புத்தகத்தில் குறிபிட்டுள்ளார்.


1990 களில் இடது சாரி வரலாற்றாசிரியர்கள் அகம்மதுவின் கூற்றை பொய்யாகக் கூறினர். – அதன் பின்னர் பின்னர் அவர் தனது கண்டுபிடிப்புகளை விவரிக்கும் வகையில் ஒரு கட்டுரையை எழுதினார்.


இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் "அறியாமை அறிக்கைகளை" வெளியிட்டதற்காகவும், முஸ்லிம் சமூகத்தை ஒரு தவறான சவாரிக்கு அழைத்துச் சென்றதற்காகவும் அவர் கோபத்துடன் அந்த கட்டுரையில்குறிப்பிட்டுள்ளார். இந்த இடதுசாரிக் குழுவில் கிட்டத்தட்ட யாரும் ஒரு தொல்பொருள் ஆய்வாளர் அல்ல, எனவே பாபரி மசூதிக்குக் கீழே ஒரு கோவிலுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூற அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் கட்டுரையில் கூறியுள்ளார்.


ராம் கோவில் சர்ச்சையில் கே கே முஹம்மதுவின் தனிப்பட்ட பார்வை:


இஸ்லாமியர்களுக்கு மெக்கா எப்படி புனிதமானதோ, மதீனா எப்படி முக்கியமானதோ அதேபோல இந்துக்களுக்கு ராம் ஜன்மபூமி முக்கியமானது என்பதை முஹம்மது மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் முஸ்லிம்கள் விருப்பத்துடன் ஒரு பகுதியை இந்துக்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


“இப்போது கூட நேரம் கடந்துவிடவில்லை. உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்குவதற்கு முன், முஸ்லிம்கள் அந்த இடத்தை இந்துக்களிடம் ஒப்படைத்து ஒரு நல்ல முன் உதாரணத்தை உருவாக்க வேண்டும். அதுவே எனது தாழ்மையான வேண்டுகோள் ”என்று முஹம்மது மேற்கோளிட்டுள்ளார்.


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்தவரை, முஹம்மது கூறுகையில், தொல்பொருள் சான்றுகள் ஒரு இந்து கோவிலுக்கு ஆதரவாக உள்ளன, மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இதற்கு மாறாக இருக்காது என்று அவர் நம்பினார்.


This is a Translated Article From Swarajya


Next Story
கதிர் தொகுப்பு
Trending News