370 சட்ட பிரிவு நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தானியர்கள் : சட்ட நடவடிக்கை எடுத்து பஹ்ரைன் அரசு அதிரடி
370 சட்ட பிரிவு நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தானியர்கள் : சட்ட நடவடிக்கை எடுத்து பஹ்ரைன் அரசு அதிரடி
By : Kathir Webdesk
அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவையும், 35A பிரிவையும் ரத்து செய்தும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக்கியதன் மூலம் மோடி- அமித் ஷா கூட்டணி நமது தேசத்தை ஒரே நாடாக ஐக்கியப்படுத்தியுள்ளனர்.
இதனை அடுத்து, நமது எதிரி நாடான பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. அதன் தொடர்ச்சியாக 370 சட்ட பிரிவு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தியது சட்டவிரோதம் என பாகிஸ்தானியர்கள் பஹ்ரைனில் உள்ள பாகிஸ்தானியார்கள், கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, கோஷங்கள் எழுப்பியவர்கள் மீது பஹ்ரைன் அரசு வழக்கு போட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து அதிரடி காட்டியுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பஹ்ரைன் உள்துறை அமைச்சகம், "ஈத் வழிப்பாட்டிற்கு பிறகு, சட்ட விரோதமாக ஒன்று கூடிய சில ஆசிய மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்", என்று கூறப்பட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானிற்கு இஸ்லாமிய நாடுகள் ஆதரவு தெரிவிக்கும் என்று பாகிஸ்தானியர்கள் எதிர்பார்த்த நிலையில், இஸ்லாமிய நாடுகள் கூட இந்தியா பக்கம் நின்றிருப்பது பாகிஸ்தானிற்கு அடுத்த மூக்கடைப்பு ஏற்பட்டுள்ளது.