Kathir News
Begin typing your search above and press return to search.

பெண்களை கடத்தும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக பலுசிஸ்தான் மக்கள் லண்டனில் கண்டன ஆர்பாட்டம்!!

பெண்களை கடத்தும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக பலுசிஸ்தான் மக்கள் லண்டனில் கண்டன ஆர்பாட்டம்!!

பெண்களை கடத்தும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக பலுசிஸ்தான் மக்கள் லண்டனில் கண்டன ஆர்பாட்டம்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Oct 2019 3:09 PM IST


ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் கைகளில் சிக்கி நீண்டகாலமாக எந்த வித வளர்ச்சியும் இல்லாமல் இருளில் தவிக்கும் பகுதி பலுசிஸ்தான் பகுதியாகும் முரட்டுத்தன்மையுடன் நடக்கும் பாகிஸ்தான் ராணுவத்தால் இங்குள்ள முஸ்லிம்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு வருகிறது. பலுச்சுகள் எனப்படும் இவ்வகை முஸ்லிம்கள் பாகிஸ்தானால் தாங்கள் பாதுகாப்பின்றி வாழ்வதாகவும்.. தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் எனவும் போராடத் தொடங்கியுள்ளனர்.


காஷ்மீருக்கான 370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட போது பாகிஸ்தான் காஷ்மீரிகளுக்காக நீலிக் கண்ணீர் வடித்தது. அந்த நேரத்தில் பலுசிஸ்தானியர்கள் பாகிஸ்தான் தங்களை விடுவிக்க வேண்டும் இந்தியா உதவ வேண்டும் எனக் கூறி ஆர்பாட்டம் செய்தனர்.


இந்த நிலையில் பலுசிஸ்தான் தென் மேற்கு மாகாணத்தில் இருந்து பலூச் பெண்கள் மற்றும் குழந்தைகள் கட்டாயமாக காணாமல் போனது தொடர்பான பிரச்சினையை எழுப்புவதற்காக பலூச் தேசிய இயக்கத்தின் (பி.என்.எம்) ஆர்வலர்கள் பிரிட்டிஷ் பிரதமரின் இல்லமான 10 டவுனிங் தெருவுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.


கையில் கண்டன பலகைகளை ஏந்திய ஆர்பாட்டக்காரர்கள் ‘பலூச் இனப்படுகொலையை நிறுத்துங்கள்’, ‘பலூசிஸ்தானில் மனித உரிமைகளை மீட்டெடுங்கள்’, ‘பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு’, ‘ 25000 க்கும் மேற்பட்ட பலூச்சுகள் காணவில்லை’ எனக் கூறி பாக்கிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர். மாகாணத்திலிருந்து நூற்றுக்கணக்கான பலூச் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தியதன் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இருப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.


உலகளாவிய மேடையில் இந்த பிரச்சினையை எழுப்ப பலூச் ஆர்வலர்கள் #SaveBalochWomen என்ற ஹேஷ்டேக்குடன் ஒரு சமூக ஊடக பிரச்சாரத்தை மேலும் தொடங்கினர். இதே போன்ற கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளை எழுப்பி சென்ற மே மாதம் சுவிட்சர்லாந்து சென்று இவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். இந்த முஸ்லிம் இன தலைவர்கள் அடிக்கடி டெல்லி வந்து தங்கள் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. Â


This is a Translated Article From OP INDIA


Next Story
கதிர் தொகுப்பு
Trending News