இனி நம்மை மீறி ஒரு பொருள் கூட சீனாவிலிருந்து வராது - மின்சாரத்துறையில் மத்திய மின்வாரிய அமைச்சர் காட்டிய அதிரடி!
இனி நம்மை மீறி ஒரு பொருள் கூட சீனாவிலிருந்து வராது - மின்சாரத்துறையில் மத்திய மின்வாரிய அமைச்சர் காட்டிய அதிரடி!

இந்திய சீன எல்லைப்புறங்களில் அண்மையில் அரங்கேறிய அத்துமீறல் மற்றும் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதை சுட்டிக்காட்டி, சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா அனுமதிக்காது என்று மத்திய மின்வாரிய அமைச்சர் ஆர் கே சிங் அறிவித்தார்.
அதே போல பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவும் இனி அனுமதி தேவைப்படும்.
"மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியவற்றிற்கு தேவையான அனைத்தையும் இன்று நாமே உற்பத்தி செய்கிறோம். 2018-19 ஆம் ஆண்டில், நாங்கள் 71,000 கோடி ரூபாய் மின் சாதனங்களை இறக்குமதி செய்தோம், அதில் ரூ .21,000 கோடி மதிப்புடைய பொருள் சீனாவுடையது.
இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நமது நாட்டிலேயே உபகரணங்கள் தயாரிக்கும் திறன் இருக்கும்போது, பிற நாடுகளிலிருந்து வாங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். இறக்குமதி செய்யப்படும் எந்த உபகரணத்திற்கும் அனுமதி தேவைப்படும். சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து உபகரணங்களுக்கு நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்திய உற்பத்தியை குறைக்க சீனா செயற்கையாக குறைந்த கட்டணத்தில் உபகரணங்களை விற்பனை செய்கிறது என்றார். ஆகஸ்ட் 1 முதல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய உபகரணங்கள் இறக்குமதிக்கு 25% வரி விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது, இது அடுத்த ஆண்டு 40% ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.