பசுக்களை கடத்திய இஸ்லாமிய இளைஞர்: துப்பாக்கியால் தாக்கிய BSF!
வங்காளத்தின் மால்டாவில் பசுக்களை கடத்திய குற்றத்திற்காக BSF துப்பாக்கியால் சுடப்பட்டார்.
By : Bharathi Latha
வங்கதேசத்தில் இருந்து அண்டை நாடுகளுக்கு பசுக்களை தொடர்ச்சியாக கடத்தி வந்த இஸ்லாமிய இளைஞர் தற்பொழுது துப்பாக்கியால் சுடப்பட்ட செய்தி அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எல்லைப் புறக்காவல் நிலையம் அருகே பூர்ணபாபா நதி வழியாக பசுக்களைக் கடத்திச் சென்ற குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டார். மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், அண்டை நாட்டிற்கு பசுக்களைக் கடத்தியதாகக் கூறப்படும், 22 வயது வங்காளதேச இளைஞர் எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) காரணமாக ஒருவர் காயமடைந்ததாக துணை ராணுவப் படை வட்டாரங்கள் ஜனவரி 7 அன்று தகவலை தெரிவித்தன.
குற்றம் சாட்டப்பட்டவர் வங்காள தேசத்தின் ருகுந்திபூரைச் சேர்ந்த யூசுப் அகமது என்று தற்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ளார். ஜனவரி 6 ஆம் தேதி மாலை ஹபீப்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள எல்லைப் புறக்காவல் நிலையத்திற்கு அருகே பூர்ணபாபா நதி வழியாக பசுக்களைக் கடத்திக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேலும் கடத்தல்காரர்களுக்கு அங்கு இருந்த காவல் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. பிறகு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு, மீதமுள்ள கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர் மால்டா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் இன்னும் சில கடத்தல்காரர்களை அதிகாரிகள் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Input & Image courtesy: The Hindu