உக்ரைன் இந்திய மாணவர்களுக்கு உதவி கரம் நீட்டிய ஹிந்து அமைப்பு
By : Thangavelu
உக்ரைனில் நடத்தப்பட்டு வரும் போரால் அங்குள்ளவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதால், அனைத்து வகையிலான உதவிகளை செய்து வருவதாக ஸ்ரீ சுவாமிநாராயண் மந்திர் ஆன்மிக அமைப்பு கூறியுள்ளது.
இந்தியாவில், மும்பையை தலைமையிடமாக வைத்து இயங்கி வரும் ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திர் என்ற ஆன்மிக அமைப்பை சேர்ந்த தீர்த்தஸ்வரூப்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பிரதமர் மோடி கடந்த மாதம் 27ம் தேதி சாது பிரம்மவிஹாரிதாஸை தொடர்பு கொண்டு, உக்ரைனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார் என கூறியிருக்கிறார்.
உலகளவை பொருத்தமட்டில் அவசரகால சேவை மற்றும் பேரிடம் சமயங்களில் நிவாரணப் பணிகளை எங்கள் அமைப்பு நீண்டகாலமாக செய்துள்ளது. எனவே உக்ரைனில் இருந்து வெளியேறும் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளின் எல்லைகளில் எங்களது அமைப்பு மனிதாபமான முறையில் இந்தியர்களுக்கு உதவிகள் செய்து வருகிறது. உணவு, உடை, குடிநீர் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. இதற்காக போலந்து நாட்டின் எல்லையில் நடமாடும் சமையற் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்களுக்கு உணவு வழங்குவதில் எளிதாக அமைந்துள்ளது. மேலும், மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Puthiyathalaimurai