Kathir News
Begin typing your search above and press return to search.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக 'உளவியலாளருடன்' பேட்டி; பர்கா தத்தை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

.ஒரு 'உளவியலாளர்' நம்பிக்கை உடைக்கும் விதமாக பொது அரங்கில் விவாதிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக உளவியலாளருடன் பேட்டி; பர்கா தத்தை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Aug 2020 8:33 AM GMT

சர்ச்சைக்குரிய ஊடகவியலாளரும், முன்னாள் NDTV தொகுப்பாளரான பர்கா தத், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்ததாக கூறப்படும் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ' உளவியலாளர்' உடன் பேட்டி கண்டு அதை ஆகஸ்ட் ஒன்று அன்று ஒளிபரப்பு செய்தார். இது நெட்டிசன்கள் இடையே பயங்கர கோபத்தையும் ஒரு 'உளவியலாளர்' தனது நோயாளியின் மருத்துவ விபரங்களை அவரது நம்பிக்கை உடைக்கும் விதமாக பொது அரங்கில் விவாதிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்ற விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

சூசன் வாக்கர் என்ற அந்த உளவியலாளர் தான், சுஷாந்த் ராஜ்புத்திற்கும், அவரது முன்னாள் காதலி ரியா சக்கரவர்த்திக்கும் சிகிச்சையும் கவுன்சிலிங்கும் அளித்ததாகவும், அதன்படி சுஷாந்த்க்கு பைபோலார் டிஸ்ஆர்டர் என்ற ஒரு மன நல வியாதி இருப்பதாகவும் இந்த விஷயத்தை இப்போது பொது அரங்கிற்கு கொண்டு வருவது தன்னுடைய கடமை என்றும் தெரிவித்தார்.

ஆனால் அவருடைய பேட்டியின் பெரும்பாலான பார்வை, சுஷாந்தின் முன்னாள் காதலியான ரியா சக்ரவர்த்திக்கு ஆதரவு அளிப்பது போலவே இருந்தது. சுஷாந்த் ராஜ்புத் மரணத்தில் அவரது தற்கொலையைத் தூண்டி விட்டதாக ரியா சக்கரவர்த்தியின் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூசன் வாக்கர் பர்கா தத்திடம் கூறும்போது, சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கும் அவரது முன்னாள் காதலி ரியா சக்கரவர்த்திக்கும் உள்ள தொடர்புகளும் சக்கரவர்த்தியின் மீதான குற்றச்சாட்டுகளும் சமூக ஊடகங்களில் பரவி வருவதால் இது குறித்து ஒரு கருத்து தெரிவிப்பது தன்னுடைய 'கடமை' என்றும் சுஷாந்த் மற்றும் ரியாவை, கடந்த நவம்பர் டிசம்பரில் பல முறை தான் சந்தித்ததாகவும் ஜூன் மாதத்தில் ரியாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு பைபோலார் டிஸ்ஆர்டர் என்ற மனநல வியாதி இருந்தால் அவரை சமாளிக்கவும் அவரைப் பார்த்துக் கொள்ளவும் ரியா மிகவும் சிரமப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மனநல வியாதிகள் குறித்து ஒரு சர்ச்சை, சமூகத்தில் நிலவுவதாகவும் அவர்களுக்கு உரிய ஆதரவும் சிகிச்சையும் மறுக்கப்படுவதாகவும் விவாதிப்பதன் மூலம் அந்த சர்ச்சைகளை நீக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நீங்கள் எந்த வகுப்பினராக இருந்தாலும் சரி உங்களுக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் சரி, நீங்கள் ஆணோ பெண்ணோ உங்களுக்கு மனநலம் பாதிக்கப்படலாம் என்ற ரீதியில் அவருடைய பேட்டி இருந்தது.

ராஜ்புட் சுஷாந்த் ராஜ்புத்தின் மரணம் முழுக்க முழுக்க இந்த மனநிலை வியாதியினாலே நிகழ்ந்தது என்பது போன்ற ரீதியில் அவருடைய பேட்டி இருந்தது. ஒரு அன்னை போல அவருடைய முன்னாள் காதலி சேர்த்துக் கொண்டதாகவும் தற்போது அவருடைய மரணத்திற்கு ரியா சக்கரவர்த்தி மீதே குற்றம் சுமத்துவது மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும் சமூக ஊடகங்களில் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தனக்கு வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மையில் ஒரு சைக்காலஜிஸ்ட் என அறியப்படும் சுசன் வாக்கர் இந்த பைபோலார் டிசார்டருக்கு சிகிச்சை கொடுக்கும் அளவுக்கு தகுதி உடைய மருத்துவர் இல்லை என்பதே உண்மை. இந்த டிஸார்டர் ஒரு மனோவியாதி. இது வழக்கத்தை விட மோசமான மாறுதல்களை, ஆற்றல் கவனம், மனநிலை, செயல்படும் தன்மை ஆகியவற்றில் ஏற்படுத்தும். இந்த வியாதிக்கு சிகிச்சை அளிக்க ஒரு தகுதியுடைய சைகாட்ரிஸ்ட்டை தொடர்பு கொள்ள வேண்டும்.

நெட்டிசன்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்த போது ராஜ்புத்திற்கு பைபோலார் இருக்கும் பட்சத்தில் அவருடைய அந்தரங்க மருத்துவ தகவல்களை இப்படி பொதுவெளியில் விவாதிப்பது மிகவும் தவறான செயல் என்று தெரிவித்தனர்.

மன நிலை பாதுகாப்பு சட்டம் 2017 பகுதி 23 (1) ன் படி மனோவியாதி உள்ள ஒருவர் தன்னுடைய மனோ நிலைமை, சுகாதாரம், சிகிச்சை ஆகியவற்றை முழுக்க முழுக்க ரகசியமாக வைத்துக் கொள்ளும் உரிமை அவருக்கு இருப்பதாகவும், இதை பொது வெளியில் தெரிவிக்க யாருக்கும் எந்த உரிமை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு சில விதிவிலக்குகளாக இத்தகைய தகவல்கள் வன்முறைக்கு பயந்தோ கோர்ட்டு உத்தரவுக்கு கீழ்ப்படிந்தோ வெளியிடப்படலாம் என்றும் ஆனால் இந்த விஷயத்தில் இப்படி வெளிப்படையாக கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெட்டிசன்கள் இதற்காக பர்கா தத் மீது கடும் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர். இரகசியமான தகவல்களை வெளியிட்டதற்காக மட்டுமன்றி சுஷாந்த் சிங் ராஜ்புத்திக்கு சிகிச்சை அளிக்கும் அளவிற்கு சூசனுக்கு இருக்கு என்ன தகுதி இருக்கிறது என்பது குறித்தும் கேள்வி எழுப்பினர். வாக்கரின் லின்க்டு இன் தகவல்படி அவர் எம்எஸ்சி லண்டனில் படித்து உள்ளதாகவும் இது எந்த விதத்திலும் ஒரு நோயாளிக்கு சிகிச்சை கொடுக்கும் அளவிற்கு தகுதி உடைய படிப்பு அல்ல என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு சைக்காலஜிஸ்ட் டால் மட்டுமே பைபோலார் டிஸ்ஆர்டருக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்றும் கூறப்பட்டது. பகிரங்கமான விமர்சனங்களுக்குப் பிறகு தன்னுடைய லின்க்டு இன் கணக்கை சூசன் பூட்டிக் கொண்டார்.

இதற்காக அவருடைய லைசென்ஸ் பறிக்கப்பட வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஒளிபரப்புவதற்கு ஒரு நாள் முன்னர் தான் பர்கா தத், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைக் குறித்த ஒளிபரப்புகள் தனக்கு வாந்தி வர வைப்பதாகவும் இத்தகைய மீடியா உலகத்தில் ஒரு பகுதியாகத் தான் இருந்ததை நினைத்து வெட்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News