Kathir News
Begin typing your search above and press return to search.

புல்வாமா சம்பவத்துக்கு டுவிட்டரில் "சபாஷ்" போட்ட அலிகர் பல்கலை மாணவன் சஸ்பெண்ட் - போலீசார் வழக்குப் பதிவு! #PulwamaAttack

புல்வாமா சம்பவத்துக்கு டுவிட்டரில் "சபாஷ்" போட்ட அலிகர் பல்கலை மாணவன் சஸ்பெண்ட் - போலீசார் வழக்குப் பதிவு! #PulwamaAttack

புல்வாமா சம்பவத்துக்கு டுவிட்டரில் சபாஷ் போட்ட அலிகர் பல்கலை மாணவன் சஸ்பெண்ட் - போலீசார் வழக்குப் பதிவு! #PulwamaAttack

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Feb 2019 3:16 AM GMT


புல்வாமாவில் 40-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படையினர் CRPF உயிரிழந்த சம்பவத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக "எப்படி இருந்தது ஜெய்ஷ், சபாஷ் சார்" என்ற வாசகத்துடன் ட்வீட் செய்த அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர் அந்த பல்கலைகழகத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்


ஏராளமான சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டுள்ள இந்த மாணவரின் ட்வீட் ஜெய்ஷ்-ஈ-மொஹமத் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாகவும் , பொறுப்பற்ற முறையில் இருப்பதாகவும் பலர் கூறினர்.


காஷ்மீரில் தீவிரவாதிகளை விரட்ட இந்தியா நடத்தியதாக கூறப்பட்ட துல்லிய தாக்குதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட "உரி" என்ற புகழ்பெற்ற இந்தி திரைப்படத்தின் வசனத்தையடுத்து இந்த ட்வீட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் பதிவுக்கு எதிராக ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து அலிகர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக அதிகாரி தொடர்புடைய மாணவர் தங்கள் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்தான் என்று கூறினார். "மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டதோடு அவர் மீது விசாரணையும் நாங்கள் துவக்கியுள்ளோம்" என்று கூறினார்.




https://twitter.com/ANINewsUP/status/1096362598684127232

Next Story
கதிர் தொகுப்பு
Trending News