Kathir News
Begin typing your search above and press return to search.

200 'வந்தே பாரத்' ரயில்கள் உற்பத்தி பராமரிப்புக்கான 58 ஆயிரம் கோடி ஒப்பந்தம் - மேக் இன் இந்தியா திட்டத்தில் போட்டி போடும் நிறுவனங்கள்

200 வந்திய பாரத் ரயில்கள் உற்பத்தி மற்றும் பராமரிப்புக்கான 58 ஆயிரம் கோடி ஒப்பந்தத்தை பெற 'பெல்' நிறுவனம் போட்டியிடுகிறது.

200 வந்தே பாரத் ரயில்கள் உற்பத்தி பராமரிப்புக்கான 58 ஆயிரம் கோடி ஒப்பந்தம் - மேக் இன் இந்தியா திட்டத்தில் போட்டி போடும் நிறுவனங்கள்

KarthigaBy : Karthiga

  |  2 Dec 2022 7:00 AM GMT

'வந்தே பாரத்' ரயில்கள் என்னும் பெயரில் நான்காண்டுகள் கடின உழைப்பு மற்றும் திட்டமிடலுக்கு பிறகு அதிவேக ரயில்கள் உருவாக்கப்பட்டன. கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டு வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. சமீபத்தில் மேலும் மூன்று ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் 102 'வந்தே பாரத்' ரயில்களை வடிவமைக்க ரயில்வே துறை ஆர்டர் கொடுத்துள்ளது. இவை அனைத்தும் இருக்கை வசதி மட்டும் கொண்ட ரயில்கள் ஆகும். இதற்கிடையே தூங்கும் வசதி கொண்ட 200 'வந்தே பாரத்' ரயில்களை வடிவமைக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.


அந்த ரயில்களை 35 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பணியை ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளது. இதற்காக 58 ஆயிரம் கோடி டென்டருக்கு அழைப்பு விடுத்துள்ளது. ரயில்கள் உற்பத்திக்கு ரூபாய் 26 ஆயிரம் கோடியும் பராமரிப்புக்கு 32,000 கோடியும் வழங்கப்படும்.இந்த டென்டரை பெற ஐந்து நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இவற்றில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனமும் அடங்கும். டைடாகார் வேகன்ஸ் என்ற நிறுவனத்துடன் கூட்டாக பெல் போட்டியில் குதித்துள்ளது.


பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளின் நிறுவனங்களும் போட்டியிடுகின்றன. 45 நாட்களில் டெண்டர் திறக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் 24 மாதங்களுக்குள் தூங்கும் வசதி 'வந்தே பாரத்' ரயிலின் மாதிரியை தயாரித்து அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முற்பகுதிக்குள் முதலாவது தூங்கும் வசதி 'வந்தே பாரத்' ரயில் அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News