உயிர் காக்கும் மூலிகை பற்றி உங்களுக்கு தெரியுமா?
Benefits and side effects of eucalyptus oil
By : Bharathi Latha
யூகலிப்டஸ் எண்ணெய் அதன் அற்புதமான ஆரோக்கிய நலன்களின் காரணமாகவே உலக முழுவதும் அறியப்படுகிறது. யூகலிப்டஸ் எண்ணெய், யூகலிப்டஸ் இலைகளிலிருந்து பெறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் பாரம்பரியமாக வளர்க்கப்படும் யூகலிப்டஸ் மரம் தற்போது இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பயிரிடப்படுகிறது. மேலும், யூகலிப்டஸைக் குறைந்த அளவில் பயிரிடும் சில நாடுகளும் உள்ளன. யூகலிப்டஸ் எண்ணெய் பெரும்பான்மையான, மருத்துவ முக்கியத்துவங்களைக் கொண்டுள்ளது. யூகலிப்டஸ் எண்ணெய் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
யூகலிப்டஸ் எண்ணெய் தலை முடிக்கு நன்மை பயக்கிறது. இது முடியை பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் ஆக்குகிறது. இருப்பினும், இதனை அதிகளவில் பயன்படுத்தக்கூடாது. தலை முடியில் யூகலிப்டஸ் எண்ணெயைப் பயன்படுத்திய பின், தலை முடியை சரியாகக் கழுவ வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு யூகலிப்டஸ் எண்ணெய் பயனுள்ளதாக இருக்கிறது.
ஏனெனில், இது இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. எனினும், இதனைக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்பட வேண்டும் இது காய்ச்சல் சிகிச்சையளிக்க பயன்படும் எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது, யூகலிப்டஸ் எண்ணெய் காய்ச்சல் காரணமாக அதிகரிக்கும் உடல் வெப்பநிலையைக் குறைக்க பயன்படுகிறது.பற்கள் தொடர்பான வியாதிகளுக்கு சிகிச்சையளிக்கிறது.
பெரும்பாலும், குழந்தைகளின் வயிற்றில் புழுக்கள் இருப்பதால் அதிக பிரச்சினைகள் ஏற்படுக்கூடும். யூகலிப்டஸ் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் இதற்கு சிகிச்சையளிக்க முடிகிறது. யூகலிப்டஸ் எண்ணெயில் உள்ள ஆன்டிவைரல் பண்புகளே இதற்குக் காரணமாகும். யூகாலிப்டஸ் உயிர் காக்கும் மூலிகை என்றும் அழைக்கப்படுகிறது.
ஏனெனில், யூகலிப்டஸ் எண்ணெய் தசை வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. உடல் வலியைப் போக்க யூகலிப்டஸ் எண்ணெயைக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் மசாஜ் செய்யவும். யூகலிப்டஸ் எண்ணெயில் ஆண்டிசெப்டிக் மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் நிறைந்துள்ளன. மார்பில் யூகலிப்டஸ் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வது நுரையீரலை சுத்தப்படுத்தி வீக்கத்தைக் குறைக்கிறது. காசநோயின் அறிகுறிகளைக் குறைக்கவும் இது பயனுள்ளதாக அமைகிறது.
Input & Image courtesy:Logintohealth