இதுவரை நீங்கள் கேள்விப்படாத இதன் பண்புகள் !
Benefits and side effects of red cabbage.
By : Bharathi Latha
முட்டைக்கோஸ் ஒரு சத்தான காய்கறியாகும். இதன் வகைகள் சிவப்பு அல்லது ஊதா முட்டைக்கோஸ் என்றழைக்கப்படுகிறது. இது பிராசிகேசி குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இது வடக்கு ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சீனாவின் சில பகுதிகளில் பயிரிடப்படுகிறது. பெரும்பாலும், சிவப்பு முட்டைக்கோஸ் ஓரு pH குறிகாட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும், இது சாலட்களில் பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய சூழலில், இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது.
இதில் வைட்டமின் C, E, K மற்றும் ஃபைபர்கள் உள்ளன. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த அந்தோசயினின் மற்றும் இன்சோல் உள்ளன, இவை மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. சிவப்பு முட்டைக்கோசு வைட்டமின்களின் உறைவிடமாகும். அஸ்கார்பிக் அமிலம் சிவப்பு முட்டைக்கோசில் உள்ள ஒரு முக்கியமான ஆக்ஸிஜனேற்றியாகும். மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. வைட்டமின் C கொலாஜன் உருவாக்கத்தை ஊக்குவிக்கிறது. சிவப்பு முட்டைக்கோசில் கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பிற முக்கிய தாதுக்கள் உள்ளன, இவை எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றன.
இது ஆஸ்டியோபோரோசிஸ், ஆர்த்ரிடிஸ் மற்றும் பிற வகை எழுப்பு தொடர்பான அழற்சியிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கிறது. கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது .முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. எனினும், இதன் அதிகபடியான உட்கொள்ளல் வயிற்று வலியை ஏற்படுத்தக்கூடும். சிவப்பு முட்டைக்கோசுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
Image courtesy:times of India