Kathir News
Begin typing your search above and press return to search.

உடலின் ஏழு சக்கரம் தெரியும், அதன் பலன்கள் தெரியுமா?

உடலின் ஏழு சக்கரம் தெரியும், அதன் பலன்கள் தெரியுமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 March 2020 7:11 AM IST

நம் உடலில் மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விஷுதி ஆக்கினை மற்றும் துரியம் என 7 சக்கரங்கள் இருக்கின்றன. மனிதர்கள் வாழ்வில் வரும் உடல், மன மற்றும் பொருளாதர பிரச்சனைகள் சரியாவது இந்த சக்கரங்கள் தடையில்லாமல் இயங்குவதை பொறுத்து இருக்கிறது.

இந்த ஒவ்வொரு சக்கரத்திற்கும் முறையே ஒளி மற்றும் மந்திரங்கள் இருக்கின்றன. மூலாதார சக்கரத்திற்கான மாத்திரம் "லம்", இதன் நிறம் சிவப்பு நிறமாகும். இந்த சக்கரம் முறையாக இயங்கினால் நமக்கு அது பாதுகாப்பான மன நிலையை கொடுக்கும், ஸ்வாதிஷ்டானம் எனப்படும் சக்கரம் மூலாதாரத்திற்கு மேல் உள்ளது, இந்த சக்கரத்திற்கான மந்திரம் "வம்" எனப்படுவதாகும். இது உணர்வுகளோடு தொடர்புடைய ஒரு சக்கரமாகும். இதன் நிறம் ஆரஞ்சு நிறமாகும். மணிபூரகம் எனும் மூன்றாவது சக்கரம் தொப்புளிற்கு கீழ் உள்ள பகுதியாகும், இது ஆளுமையை குறிக்கும் சக்கரம், இதன் நிறம் மஞ்சளாகும் "ரம்" என்பது இதன் மந்திர ஒலி.

அனாகதம் என்பது இதய பகுதியை சுற்றியுள்ள இடமாகும். இந்த சக்கரம் நன்றாக இயங்கினால் "அன்பு" உணர்வு அதிகமாக பெருகும், ஏராளமான மனோ சக்திகள் இந்த சக்கரம் நன்றாக இயங்குவதால் கிடைக்கும். "யம்" என்பது இந்த சக்கரத்தின் மந்திரம். இந்த சக்கரத்தின் ஒலி பச்சை நிறம். விஷுதி எனப்படும் தொண்டையை சார்ந்த பகுதி தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் பேச்சாற்றலுக்கும், குரல் வளத்திற்கும் ஆதாரமாக இருக்கிறது. இதன் நிறம் வெளிர் நீலமாகும், "ஹம்" என்பது இதன் மந்திரம்.

ஆக்கினை எனப்படும் புருவ மத்தியில் இருக்கும் சக்கரம் நன்றாக இயங்கினால் அதீதமான சக்திகள் நமக்கு உருவாகும், பிறர் மனதில் நினைப்பதை தெரிந்துகொள்வது, பிறரை கட்டுப்படுத்துவது போன்ற சக்திகள் நமக்குள் உருவாகும், "ஓம்" எனும் மந்திரம் இந்த சக்கரத்திற்கு உகந்த மந்திரம். இதன் நிறம் நீல நிறமாகும். இதற்கு அடுத்ததாக வரும் சக்கரம் தலை உச்சியில் இருப்பது இந்த சக்கரம் நன்றாக இயங்கினால் பிரபஞ்ச சக்தியோடும் பிரபஞ்ச அறிவோடும் நாம் எளிதாக தொடர்பு கொள்ள முடியும். தெய்வ அருளும் நம்மை எளிதாக வந்தடையும்

இந்த சக்கரத்திற்கு உகந்த மந்திரம் "ஞா " என்பதாகும், இதன் நிறம் பிங்க் நிறம். மனித உடலில் உள்ள சக்தி தடைகள் மூலமாகவே நமது உடலிலும் மனதிலும் பிரச்சனை வருகிறது, இந்த தடைகளை நீக்கி நமது சக்கரங்களை முறையாக இயங்க வைத்தால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் நிறைந்து வாழலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News