வைரஸ் பாதித்த கூகுள் நிறுவன ஊழியரின் மனைவி மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம், பரபரப்பு !
வைரஸ் பாதித்த கூகுள் நிறுவன ஊழியரின் மனைவி மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம், பரபரப்பு !

பெங்களூர் கூகுள் நிறுவன ஊழியர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரும் இவரது மனைவியும் அண்மையில் கிரீஸ் நாட்டிற்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் இவரது மனைவி தனது சொந்த ஊரான ஆக்ரா சென்று விட்டார். அங்கு அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து மாயமானார். இது குறித்து அந்த பெண்ணின் பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் டெல்லி சென்று விட்டதாக தெரிவித்தனர்.
மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்போவதாக கூறியதையடுத்து, அவரது பெற்றோர் அவர் வீட்டில் தான் உள்ளார் என்று தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் அதிகப்படியாக 12 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்னர் என்பதும் அதில் 8 பேர் ஆக்ராவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.