பிரதமர் தொடங்கி வைத்த திட்டம் - சரித்திரம் படைத்த தமிழக மாவட்டங்கள் : தமிழில் வாழ்த்து சொல்லி அசத்திய மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி.!
பிரதமர் தொடங்கி வைத்த திட்டம் - சரித்திரம் படைத்த தமிழக மாவட்டங்கள் : தமிழில் வாழ்த்து சொல்லி அசத்திய மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி.!
By : Kathir Webdesk
பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் உயர்ந்ததற்காக திருவள்ளூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி விருது வழங்கினர்.
'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந்தேதி அரியானாவில் தொடங்கி வைத்தர். முதலில் நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் பின்னர் 640 மாவட்டங்களுக்கு விரிவுப்த்தப்பட்டது.
இந்த திட்டத்தின் நோக்கம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதத்தை அதிகரித்தல் ஆகும். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாவட்டங்களுக்கு விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினர்.
நாடு முழுவதும் இருந்து 10 மாவட்டங்கள் விருது பெற தேர்ந்து எடுக்கப்பட்டன. இதில் தமிழகத்தில் இருந்து திருவள்ளூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தன. திருவள்ளூர் மாவட்டத்துக்கான விருதை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரும், நாமக்கல் மாவட்டத்துக்கான விருதை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியமும் பெற்றுக்கொண்டனர். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதன் காரணமாக திருவள்ளூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் உயர்ந்தது.