Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் நேரடி வாழ்த்துக்களுடன் ராஜஸ்தான் முதல் மந்திரியாக பஜன்னால் சர்மா பதவி ஏற்பு!

ராஜஸ்தான் முதல் மந்திரியாக பஜன்னால் சர்மா பதவியேற்றார். பாஜக தலைவர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் நேரடி வாழ்த்துக்களுடன் ராஜஸ்தான் முதல் மந்திரியாக பஜன்னால் சர்மா பதவி ஏற்பு!
X

KarthigaBy : Karthiga

  |  16 Dec 2023 9:30 AM IST

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ராஜஸ்தானில் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றது. தேர்தல் நடந்த 1999 தொகுதிகளில் 115 இடங்களை பெற்று சாதனை படைத்தது அங்கு புதிய முதல் மந்திரி யார் என்று எதிர்பார்த்து நீடித்து வந்த நிலையில் முதல்முறை எம்எல்ஏவான பஜன்லால் சர்மாவை கட்சி மேலிடம் முதல் மந்திரியாக நியமித்து ஆச்சரியமூட்டியது.


முன்னாள் முதல் மந்திரி வசுந்தரா ராஜே மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை .முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட பஜன்லால் சர்மாவை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா அழைப்பு விடுத்தார். அதன்படி மாநிலத்தில் புதிய அரசு பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது. ஜெய்பூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆல்பர்ட் அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக பஜன்லால் சர்மா பதவியேற்றுக்கொன்றார். அவருக்கு கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப்பிரமாணமும் செய்து வைத்தார்.


சர்மாவை தொடர்ந்து தியாகுமாரி பிரேம்சந்த் பைரவா ஆகியோர் துணை முதல் மந்திரிகளாக பதவி ஏற்று கொண்டனர். வண்ணமயமான இந்த விழாவில் பிரதமர் மோடி பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி கஜேந்திர சிங் செகாவத் உள்ளிட்டோர் நேரில் பங்கேற்று புதிய முதல் மந்திரியை வாழ்த்தினார். பின்னர் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் "ராஜஸ்தான் முதல் மதுரை பஜன்லால் சர்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். பல்லாண்டுகளாக அற்பணிப்பு மிகுந்த ஒரு தொண்டராக பணியாற்றி வரும் சர்மா மாநிலம் முழுதும் பா ஜனதாவை வலுப்படுத்த பாராட்டுக்குரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். முதல் மந்திரியாக சிறந்து விளங்கவும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News