Kathir News
Begin typing your search above and press return to search.

'பாரத்' என பெயர் மாற்றம்: ஐ.நாவின் கருத்து என்ன?

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறிய தகவல்கள்.

பாரத்  என பெயர் மாற்றம்: ஐ.நாவின் கருத்து என்ன?
X

KarthigaBy : Karthiga

  |  7 Sept 2023 10:45 PM IST

ஐ.நா சபையில் துருக்கி பெயர் கடந்த வருடம் மாற்றப்பட்டுள்ளது. முறையாக கோரிக்கை விடுக்கப்பட்டால் பரிசீலனை செய்யப்படும்.இந்தியா தனது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதை "பாரத்" என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரின் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக "பாரத்" என அச்சிடப்பட்டுள்ளது.


எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என்றாலும், உலகளவில் "இந்தியா" என்பது "பாரத்" என மாற்றப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவாதம் தொடங்கியுள்ளது. பாஸ்போர்ட், தூதரகம், மின்அஞ்சல் போன்றவற்றில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் ஐ.நா. இந்த விவகாரத்தை எவ்வாறு எடுத்துக் கொள்கிறது என்று பார்ப்போம் என்றால், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில் ''துருக்கி (Turkey) துருகியே (Turkiye) என கடந்த வருடம் மாற்றப்பட்டது.


இதற்கு அந்த அரசிடம் இருந்து முறையாக கோரிக்கை எங்களுக்கு வந்தது. அதனடிப்படையில் மாற்றப்பட்டது. அதேபோல், எங்களுக்கு கோரிக்கை வந்தால், நாங்கள் அவர்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாக கருதுவோம்'' என்றார். இந்திய அரசு சார்பில் முறைப்படியான கோரிக்கை விடுக்கப்பட்டால் ஐ.நா.வில் இந்தியா என்பதற்கு பதில் 'பாரத் ' என அழைக்கப்படும்.


SOURCE : maalaimalar.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News