பாரத் மார்ட் வணிக மையம்: அபுதாபியில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி!
பாரத் மார்ட் வணிக மையத்தை அபுதாபியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
By : Karthiga
அபுதாபியில் உள்ள இந்து கோயிலை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி சென்றார். பிரதமர் மோடி தலைமையில் முதல் இந்து கோயிலான சூரிய நாராயண் கோவில் திறப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. அங்குள்ள சிலைகளுக்கு பிரதமர் மோடி மலர் தூவி அர்ச்சனை செய்து வழிபட்டார். பிரதமரின் வருகையொட்டி துபாயில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்தோடு மற்றொரு நிகழ்வையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பாரத் மார்ட் வணிக மையத்தை அபுதாபியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் .
வளைகுடா நாடுகளுடன் பெட்ரோலிய பொருள்களுக்கு அப்பாலும் வணிக உறவினை இந்தியா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது .இந்நிலையில் பாரத் மார்ட் எனும் புதுமையான வணிக மையத்தை துபாயில் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார் .இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணை அதிபர் மற்றும் பிரதமரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கலந்து கொண்டார். இதற்கான பணிகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.
இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்களது பல்வேறு வகையான தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்த இது ஒருங்கிணைந்த வர்த்தகத் தளமாக செயல்படும். சுமார் ஒரு லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவை கொண்டிருக்கும் இந்த பாரத் மார்ட் கிடங்கு, சில்லரை விற்பனை மற்றும் விருந்தோம்பல் வசதிகளை ஒருங்கே கொண்டிருக்கும் கனரக இயந்திரங்கள் முதல் அன்றாட தேவைக்கான எளிய பொருட்கள் வரை சகலமானவையும் இங்கே பெறலாம்.
SOURCE :Dinaboomi