Kathir News
Begin typing your search above and press return to search.

வீர சாவர்க்கருக்க்கு பாரத் ரத்னா! முன்மொழிந்தது பா.ஜ.க!!

வீர சாவர்க்கருக்க்கு பாரத் ரத்னா! முன்மொழிந்தது பா.ஜ.க!!

வீர சாவர்க்கருக்க்கு  பாரத் ரத்னா! முன்மொழிந்தது பா.ஜ.க!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Oct 2019 4:07 PM IST



மகாராஷ்டிராவில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி (பாஜக) இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத் ரத்னாவிற்கு வீர் சாவர்க்கர் என்று பிரபலமாக அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பெயரை முன்மொழியப்போவதாக உறுதியளித்துள்ளது.


மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மகாராஷ்டிரா பாஜக தலைவர்கள், இந்து மகாசபா தலைவருக்கு மதிப்புமிக்க விருதை வழங்குமாறு மத்தியில் உள்ள பாஜக அரசாங்கத்தை வலியுறுத்த முடிவு செய்துள்ளனர்.


"மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸின் கீழ் மாநில அரசு, வீர் சாவர்க்கர் பாரத் ரத்னாவைப் பெற வேண்டும் என்று மத்திய அரசிற்கு முன்மொழிகிறது என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது" என்று மும்பையைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.


வீர் சாவர்க்கர் பாஜகவின் சித்தாந்த தாய் இயக்கமான ஆர்எஸ் எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் இல்லை என்றாலும் கூட பாஜகவில் உள்ள பலர் சாவர்க்கரை பார்த்து தங்களை ஊக்குவித்து கொள்கின்றனர்.
மாநிலத்தில் பாஜக அரசாங்கத்தால் பாரத ரத்னாவுக்கு முன்மொழியப்படும் பிற முக்கிய பெயர்களில் ஜோதிபா பூலே மற்றும் சாவித்ரி பாய் புலே ஆகியோரின் பெயர்களும் உள்ளன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News