Kathir News
Begin typing your search above and press return to search.

குஜராத் முதல் மாதிரியாக பூபேந்திரபடேல் நாளை பதவி ஏற்பு - விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

குஜராத் மாநிலத்தின் முதல் மனைவியாக பூவேந்திரபடியில் நாளை பதவி ஏற்கிறார் விழாவில் பிரதமர் மோடி உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார்கள்

குஜராத் முதல் மாதிரியாக பூபேந்திரபடேல் நாளை பதவி ஏற்பு - விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

KarthigaBy : Karthiga

  |  11 Dec 2022 7:00 AM GMT

குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க தொடர்ந்து ஏழாவது முறையாக அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. அங்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காந்தி நகரில் உள்ள அந்த கட்சியின் அலுவலகமான கமலத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மேலிட பார்வையாளர்களாக ராணுவ மந்திரியின் ராஜ்நாத் சிங், பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜுன் முண்டா மற்றும் கர்நாடக முன்னாள் மந்திரி எடியூரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதில் சட்டமன்ற பா.ஜ.க தலைவராக பூபேந்திர படேல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து பூபேந்திரபடேல் மாநில பா.ஜ.க தலைவர் சி.ஆர். பாட்டீலுடன் குஜராத் கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்க அவர் கவர்னர் ஆச்சாரிய தேவ்ரத்தை சந்தித்தார். தான் பா.ஜ.க சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி எடுத்து கூறி ஆட்சி அமைக்க அவர் உரிமை கோரினார். இது தொடர்பான கடிதத்தையும் அவர் அளித்தார்.


காந்தி நகரில் புதிய தலை செயலகம் அருகே அமைந்துள்ள ஹெலிபேடு மைதானத்தில் நாளை நடக்கிற விழாவில் குஜராத் மாநிலத்தின் 18 வது முதல் மந்திரியாக பூபேந்திரபடேல் பதவி ஏற்கிறார். அவருக்கு கவர்னர் ஆச்சரிய தேவரத் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். விழா ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News