Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமரை வரவேற்க ருத்ரதாண்டவ நடனம்: பா.ஜ.க தொண்டர்கள் உற்சாக ஏற்பாடு!

பிரதமர் மோடி அவர்களை வரவேற்க பா.ஜ.க சார்பில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பிரதமரை வரவேற்க ருத்ரதாண்டவ நடனம்: பா.ஜ.க தொண்டர்கள் உற்சாக ஏற்பாடு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 May 2022 1:43 PM GMT

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தரைவழி மார்க்கமாக சிவானந்த சாலை வழியாக நேரு உள் விளையாட்டு அரங்கில் பயணம் செய்திருக்கிறார். எனவே 3 கிலோமீட்டர் பயணத் தொலைவு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பா.ஜ.க தொண்டர்கள் வழிநெடுகிலும் பல்வேறு வகையான ஏற்பாடுகளும் செய்து இருக்கிறார்கள். பிரதமரை வரவேற்க ருத்ரதாண்டவ நடனம், ஆடல், பாடல்களும் தயார் நிலையில் தொண்டர்கள் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.


பா.ஜ.க தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு தற்போது அமர்க்களமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு வருகை தருவதற்கு ஏற்பாடு தமிழகத்தில் நடந்தது. ஆனால் தொற்று நோயின் தாக்கம் காரணமாக அந்த ஏற்பாடு ரத்து ஆனது. இதுவே தற்போது பிரதமர் அவர்கள் தமிழகத்திற்கு வருகை தருகிறார் இதன் காரணமாக பா.ஜ.க தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உற்சாகத்துடன் ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள்.

Input & Image courtesy:News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News