தொலைத்தொடர்பு துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு - அதிரடி முடிவு!
தொலைத்தொடர்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் உச்ச வரம்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது. தானியங்கி முறையிலான அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 49 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
By : Thangavelu

இதில் சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு 100 சதவீத தானியங்கி வழி பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், தொலைத்தொடர்புத் துறையில் தானியங்கி முறை மூலம் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் இதற்கு பொருந்தும் என்றார்.
மேலும், எதிர்கால ஏலங்களைப் பொருத்தவரை, அலைக்கற்றை உரிமைக் காலம் 20 ஆண்டுகளுக்கு பதிலாக 30 ஆண்டுகளாக இருக்கும் எனக் கூறினார்.
Source: Malaimalar