பிக் பாஸ் அப்டேட்! ஷெரினிடம் எடுபடாத வனிதாவின் சகுனி வேலை!
பிக் பாஸ் அப்டேட்! ஷெரினிடம் எடுபடாத வனிதாவின் சகுனி வேலை!
By : Kathir Webdesk
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பார்வையாளர்கள் வனிதாவை வெளியேற்றிய பின்னரும், மீண்டும் வனிதாவை பிக்பாஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாளராக அனுமதித்துள்ளது பார்வையாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் விருப்பப்படியே நிகழ்ச்சியை பரபரப்பாக்க வனிதா தனது வத்திக்குச்சி வேலையை செவ்வனே செய்து வருகிறார். வனிதாவால் பொங்கிய அபிராமி, மதுமிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில் அடுத்து யாரை குறி வைக்கலாம் என வனிதாவின் யோசனை கடந்த இரண்டு நாட்களாக உள்ளது. இந்த நிலையில் சக போட்டியாளர்கள் வனிதாவிடம் சிக்காமல் தப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஷெரின், தர்ஷன் இடையே ஒரு சிறு ஊடல் ஏற்பட்டது. இந்த ஊடலால் ஷெரின் அப்செட் ஆகவிருந்த நிலையில் வனிதா தனது வத்திக்குச்சி வேலையை ஷெரினிடம் ஆரம்பித்தார். ஆனால் ஏற்கனவெ சேரனின் அட்வைஸ் காரணமாக கொஞ்சம் தெளிவாகியிருந்த ஷெரின், வனிதாவிடம், 'தர்ஷன் விளையாட்டாதான் பேசினான். நான் தான் கொஞ்சம் சீரியஸா எடுத்துகிட்டு ஃபீல் பண்ணிகிட்டு இருக்கேன்' என்று கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் வத்திக்குச்சி வனிதா ஏமாற்றம் அடைந்தார்.